ஆழ்கடலில் சுவாசிப்பதற்கு என புதிய உபகரணம் கண்டுபிடிப்பு!
மீன்களின் சுவாசக் கட்டமைப்பு போன்று செயற்படும் ‘திரைட்டன்’ என அழைக்கப்படும் மீன்களைப் போன்று நீரிலிருந்து ஒட்சிசன் வாயுவை பெற்று சுவாசிக்க உதவும் முகமூடி உபகரணமொன்றை தென் கொரிய வடிவமைப்பாளர் ஒருவர் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
இந்தப் புதிய உபகரணம் ஆழ்கடலில் ஒட்சிசன் கொள்கலனின் உதவியின்றி நீரிலிருந்தே ஒட்சிசனைப் பெற்று சுவாசிக்க வழிவகை செய்கிறது.
மேலும் ஜியபையுன் யியோன் என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உபகரணத்திலுள்ள நுண் காற்றழுத்தக் கருவிகள் கடல் நீரிலிருந்து ஒட்சிசனை வேறுபிரித்து அகத்துறிஞ்சி பயன்பாட்டாளருக்கு வழங்குவதுடன் இந்த கருவி தேவைக்கு மேலதிகமாக அகத்துறிஞ்சப்படும் ஒட்சிசனை அந்த உபகரணத்துடன் இணைக்கப்பட்ட சிறிய தாங்கியில் சேமிக்கத்தக்கதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி உபகரணம் வழமையான மின்னேற்ற பற்றரிகளிலும் பார்க்க 30 மடங்கு சிறிய நுண் பற்றரியால் சக்தியூட்டப்பட்டு செயற்படுகின்ற போதும் இந்தபுதிய கண்டுப்பிடிப்பு முழுமைபெற்று பாவனைக்கு அறிமுகப்படுத்தப்படுவதற்கு சிறிதுகாலம் தேவைப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment