Thursday, January 23, 2014

இலங்கைக்கு பல்வேறு நாடுகளின் விலங்குகள்! (படங்கள் இணைப்பு)

இலங்கைக்கு சர்வதேச நாடுகளில் இருந்து பல வகை விலங்குகள் கிடைத்துள்ளன.

இந்தியாவின் இந்திரா காந்தி மிருகக்காட்சிசாலையில் இருந்து பிளெக் பக் இனத்தைச் சேர்ந்த 10 மான்களும், அவுஸ்திரேலியாவுக்கு உரித்தான எமு இன பறவைகள் நான்கும், வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுர டி சில்வா தெரிவித்தார்.

மேலும் தென் கொரியாவில் இருந்து ஒரு ஜோடி சிங்கங்களும், ஒரு ஜோடி வங்கப் புலிகளும் கிடைக்கவுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன், சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்தும் விலங்கினங்கள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளன.

ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படும் சஃபாரி மிருகக்காட்சிசாலையில் மக்களின் பார்வைக்காக இந்த அனைத்து விலங்குகளும் வைக்கப்படவுள்ளதாக தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுர டி சில்வா மேலும் தெரிவித்தார். (என்எப்)


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com