Monday, December 2, 2013

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் அரைநிர்வாண ஆர்ப்பாட்டம் செய்தோரின் கோரிக்கை பற்றித் தெரியுமோ?

அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் இன்று 2 ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன் நடத்திய தமது பாரம்பரிய ஆடையான அரை நிர்வாண ஆர்ப்பாட்டத்தின் போது மக்களுக்கு வழங்கப்பட்ட மக்களை விழிப்பூட்டுதல் எனும் துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

வணக்கத்துக்குரிய மதகுருமார்களே

அன்பார்ந்த மக்களே

பல தசாப்தங்களாக நமது கமத்தொழில் துறையில் தோன்றியிருக்கும் பிரச்சினைகளான அதாவது உற்பத்திகளுக்கு நியாய விலை கிடைக்காமை. விதைப்பதற்கு நல்லரக விதை கிடைக்காமை வானை நோக்கி நகர்ந்திருக்கும் கிருமிநாசினிகளின் விலை காட்டு யானைத் தொல்லை வயது முதிர்ந்த விவசாயிக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமை போன்ற பிரச்சினைகளால் நாம் கஷ்டமான காலத்தையே கடத்திக் கொண்டிருக்கின்றோம்.

தொடந்தும் சொல்லுவதென்றால் எமது பிள்ளைகளுக்கு நாட்டில் மிகவும் மோசமான பாடசாலை. எமக்கு நாட்டில் மோசமான வைத்தியசாலை. எமது விவசாய கிராமத்திற்கு நாட்டில் மோசமான பாதைகள். நமது கிராமத்தில் இரவில் காட்டு யானைகளின் தொல்லை. நமது விவசாயிகளுக்கு தீர்வின்றிய சிறு நீரக நோய். என்பன போன்ற பிரச்சினைகளால் சமூகத்தில் நாம் செல்லாக் காசாக வீசப்பட்டுள்ளோம்.

ஆனால் ஒரு தேசத்தின் பசியைப் போக்கும் விவசாயிகளான எமக்கு வெற்றி பெற்ற யுத்ததிற்கு இராணுவ வீர்ர்களை வழங்கிய மக்களான எமது இந்த சோகக் கதையை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

எமது உற்பத்திகளுக்கு உரிய விலை வழங்காத எங்களிடமிருந்து கொள்ளையடிப்பவர்களை உங்களுக்கு கொள்ளை விலைக்கு விற்கின்ற எங்களுக்கு இலாபமில்லாத உங்களுக்கு நன்மையில்லாத சந்தையை அமைத்திருக்கும் அரச விதை திணைக்களத்தை கம்பனிகளுக்கு விற்று வெளிநாடுகளிலிருந்து தரக்குறைவான விதைகளை இறக்குமதி செய்து அந்த விதைகளுக்கு கிருமிநாசினிகளையும் இறக்குமதி செய்து உங்களுக்கு நோய் நொடிகளும் எங்களுக்கு வறுமையும் உரித்தாக்கியிருக்கும் அரசாங்கங்களில் புதிய வடிவான அரசாங்கம் 2005 ஆம் ஆண்டில் உருவான ராஜபக்க்ஷ அரசாங்கமாகும். வக்கடையில் கை கழுவிக்கொண்டு வரம்புகளில் நடந்து வந்ததாகக் கூறும் ராஜபக்க்ஷ அரசாங்கம் எமக்கு வழங்கிய விவசாய ஓய்வூதியத்தை 2012 ஆம் ஆண்டோடு 900 கோடி ரூபாய் வெற்றாகி விட்டதால் அதை நிறுத்தியது.

இம் முறை வரவு செலவுத் திட்டத்தின் போது ராஜபக்க்ஷ ஆட்சியாளரிடம் எமக்கு உக்கிரமடைந்துள்ள 6 பிரச்சினைகளை கோரிக்கைகளாகச் சமர்ப்பித்தோம். ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ 5 கோரிக்கைகளை உதாசீனப்படுத்தியுள்ளார். “கடவுளின் படையலை சாப்பிட்டது போல” விவசாயிகளுக்கு 60 வயதில் வழங்க வேண்டிய ஓய்வூதியப் பணத்தை 60 வயதிலிருந்து 63 வயதாக அதிகரித்து காவாலித்தனத்தைப் புரிந்துள்ளார்.

தற்போது விவசாயிகள் பரந்து வாழும் பிரதேசங்களில் சிறுநீரக நோய் வேகமாகப் பரவி வருவது யாவருக்கும் தெரிந்த விடயமாகும். ராஜபக்க்ஷவின் ஓய்வூதியக் கொடுப்பனவை 63 வயதில் பெற்றுக் கொள்வதற்கு விவசாயிகள் மிஞ்சுவார்களா என்பதே கேள்விக் குறியாகும். ஏனென்றால் 18 வயது இளம் விவசாயிகள் கூட சிறுநீரக நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். 60 வயதில் வழங்குவதற்கு உறுதியளித்த ஓய்வூதியத்தை 63 வயதாக அதிகரித்த மஹிந்தவின் விளையாட்டானது நாட்டின் பசியை போக்குவதற்காக நெற் கதிரையும் மரக்கறி பழவகைகள் சோளம் உள்ளிட்ட அனைத்தையும் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கேயாகும். இந்நாட்டில் நச்சு உணவுகளை உட்கொள்வோராக எமக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதிக்கு எதிராக உங்களது குரலையும் எமக்காக எழுப்ப வேண்டியிருக்கிறது. உங்களது குரல் எமது சக்தியாகும். நாளை உங்களதும் உங்களது பிள்ளைகளினதும் பசியைப் போக்குவதற்கான இந்த அரும்பணியை தொடர்வதற்காக எமக்காக உங்களது குரலை ஓங்கச் செய்யுங்கள். எம்மிடமிருந்து பறிக்கப்பட்ட ஓய்வூதியப் பணத்தை பெற்றுக் கொள்வதற்காக கமக்காரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வயது 60 இலிருந்து 63 ஆக அதிகரிப்பை உடனடியாக இரத்துச் செய்!

கமக்காரர்களின் நிலுவையான ஓய்வூதியத்தை செலுத்துவதற்கு நிதி ஒதுக்கு!

இவ்வாறு விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

(ஏ.எல்.ஜுனைதீன்)

1 comments :

Anonymous ,  December 2, 2013 at 10:29 PM  

Very reasonable demands.
Farmers and the plantation labours are backbone to our country. They should be respected first before any others in Sri Lanka.
Unfortunately, government or any authorized officials don't give any proper respect for them.
But, they give respects for the useless monks.
Government should understand the fact, that if the backbone got damaged the whole country would collapse one day.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com