Tuesday, December 31, 2013

மலரும் புத்தாண்டு அனைவருக்கும் சாந்தி, சமாதானம், சுபீட்சத்தை ஏற்படுத்த வேண்டும்- ஆளுநர்

மலரும் புத்தாண்டு வட மாகாண மக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் சாந்தி, சமாதானம், சுபீட்சத்தை ஏற்படுத்த வேண்டும் என வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி வெளியிட்டுள்ள புது வருட வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.


மேலும் தற்போது நிலவும் 2013 ஆம் ஆண்டானது முடிவுக்கு வரும் இவ்வேளையில் 2014 ஆம் ஆண்டு(புதுவருடத்திற்கான) வாழத்துரைகளையும் நல்லாசிகளையும் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளதுடன் பிறக்கும் இப் புத்தாண்டில் சிறப்பு வாய்ந்த அனைத்தும் கிடைக்க வேண்டுமெனவும், இவற்றுடன் தங்களுக்கு மன நிறைவும், சந்தோசமும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டுமெனவும் வாழ்த்துகின்றேன் எனக்குறிப்பிட்டார்.


இதே வேளை மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட சமாதான சூழ்நிலையையும் மகிந்த சிந்தனையான வடக்கின் வசந்தம் / உத்துறு வசந்தய ஆகிய செயல்திட்டங்களின் அடிப்படையில் வட மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களின் பலா பலன்களையும் இம் மாகாணத்தில் வாழும் மக்கள் அனுப்பவிக்க்க் கூடியதாக இருக்கின்றது என்பதை, வட மாகாண ஆளுநர் என்ற வகையில் நான் நினைவு கூருவதில் பெருமிதம் அடைகின்றேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மேற்குறிப்பிடப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் பொருளாதர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ச அவர்களின் வழிகாட்டல்களின் கீழ் ஜனாதிபதி அவர்களின் துரித செயலணியினால் முறையாக அமுலாக்கப்பட்டன எனக்குறிப்பிட்டார்.

அதே வேளை கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளன, இடம்பெயர்ந்தோர் மீள்க்குடியமர்த்தப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது மட்டுமல்லாது யுத்தத்தால் சேதமுற்ற வீடுகள் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் புதிய வீடுகள் பலவும் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் எமது நடவடிக்கைகளை முன்னோக்கி நகர்த்துவது காலத்தின் தேவையாக உள்ள நிலையில் மிகவும் சந்தோஷமானதும் அதிஷ்டம் நிறைந்த்துமான இப்புத்தாண்டு மலரட்டும் என்று வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி வெளியிட்டுள்ள புதுவருட வாழ்ச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comments :

Anonymous ,  December 31, 2013 at 11:43 PM  

Thank you for our Northen Governer!

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com