Wednesday, December 18, 2013

இந்திய வரலாற்றிலேயே ஒரே பிரசவத்தில் 10 உயிரற்ற சிசுக்களை பிரசவித்த பெண்!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் ஒரே பிரசவ த்தில் 10 உயிரற்ற சிசுக்களைப் பிரசவித்த சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவ ட்டத்தில் உள்ள கோடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சு குஷ்வாஹா(28). இவர் குழந்தை இல்லாத காரணத்தினால் செயற்கை முறையில் கருவுறுவதற்கான சிகிச்சைகளை மே ற்கொண்டுள்ளார். ஆனால், முறையான கண்காணிப்பு இல் லாததால் அவருக்கு பல கருக்கள் உருவாகியுள்ளன.

இந்நிலையில் கர்ப்பமாயிருந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட் டுள்ளது. இதனால் அவரது கிராமத்திலிருந்து 125 கி.மீ தொலைவில் உள்ள ரேவா மாவட்டத்தின் சஞ்சய் காந்தி மெமோரியல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு வருவதற்குள்ளாக வழியிலேயே அவர் ஒன்பது குழந்தைகளைப் பிரசவித்திருந்தார். மருத்துவமனைக்கு வந்தவுடன் மருத் துவர்களின் உதவியுடன் மற்றொரு சிசுவையும் அவர் பெற்றார்.

ஆனால் அவற்றில் ஒன்று கூட உயிருடன் இல்லை. 12 வார வளர்ச்சியுடன் காணப்பட்ட அந்த சிசுக்கள் அனைத்தும் இறந்துள்ளன.இதுகுறித்து மருத்துவ மனையின் உதவி மேலாளரான மருத்துவர் எஸ்.கே பதக் கூறுகையில், செயற்கை முறையில் கருவுறச் செய்யும்போது அதனைத் தொடர்ந்து கண்காணிக்கத் தவறி யதால் ஏற்பட்ட விளைவுதான் இது என்றும் ஆரம்பத்திலேயே கரு உருவானதைக் கவனித்திருந்தால் மூன்று குழந்தைகள் வரை காப்பாற்றியிருக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com