Thursday, November 14, 2013

இலங்கையைவிட இந்தியாவே கவலைப்பட வேண்டும்! ஜெயலலிதா முதலில் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு உணவு கொடுக்கட்டும்.

CHOGM கொழும்பில் நடைபெறுகின்ற போதிலும் இது இலங் கையின் நிகழ்வு அல்ல. பொதுநலவாய அமைப்பென்பது உச்சி மாநாடு என்பதை இந்தியா உணர்ந்துகொள்ள வேண் டுமென தெரிவித்த அவர் அமைச்சர் பசில் ராஜபக்ஷ CHOGM இல் இந்தியா கலந்துகொள்ளாததையிட்டு இலங்கையை விட இந்தியாவே கூடுதலாக கவலை அடையவேண்டும் என தெரிவித்தார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக மத்திய நிலையத்தை பார்வையிட வந்தபோது அங்கு கூடியிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் :- இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பொது நலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தராமை அவர்களது உள்நாட்டு அரசியல் பிரச்சினையே. எனவே இது தொடர்பில் எனக்கு எதனையும் கூற முடி யாது என்றார்.

இந்த மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து எவரும் போகக் கூடாது என்று தமிழ் நாட்டு சட்ட சபையில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை தமிழர்கள் சுதந்திரமின்றி வாழ்கின்றனர் என்று பேசப்படுகிறது இது தொடர்பில் என்ன கூற விரும்புகின்யர்கள் என்று இந்தியா மற்றும் வெளிநாட்டு தொலைக்காட்சி ஊட கவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு

பதிலளித்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ :- இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களை விட அதிகம் அதிகம் நிம்மதியாகவும், சந்தோஷ மாகவும் சுதந்திரமாகவும் வாழ்கின்றனர். தமிழ் மக்கள் மாத்திரமின்றி அனைத்து மக்களும் தற்போது நிம்மதியாக வாழ்கின்றனர் என்பதை உலகிற்கே எடுத்துக் காண்பிக்க கிடைத்த ஒரு சந்தர்ப்பம் இது. இலங்கையை பொறுத்தமட்டில் சிறந்த ஒரு ஜனநாயக வரலாற்று பின்னணியாகக் கொண்ட ஒரு நாடு. மாறி மாறி ஜனநாயக தேர்தல் முறைப்படியே தேர்தல்களின் மூலம் தெரிவு செய்யப்படும் அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறுகின்றது. இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் கடந்தாலும் 3 தசாப்த யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு சுதந்திரத்தை பறிகொடுத்தி ருந்தது.

தற்போது யுத்தத்திற்கு பின்னர் பாரிய அபிவிருத்தி பொருளாதார வளர்ச்சியையும் எமது நாடு கண்டு வருகிறது. இந்நிலையில் இந்த மாநாடு இங்கு நடைபெறுவதன் மூலம் உலகில் கவனம் இலங்கையின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பதிலளித்தார். இதனை நீங்கள் நேரில் சென்று பார் வையிடலாம் என்றார்.

தமிழ் நாட்டில் வாழும் அதிகமான தமிழர்கள் கஷ்டத்துடனும், உணவின்றியும் வாழ்கின்றனர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முதலில் அவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு இலங்கை தமிழர்கள் தொடர்பில் பார்க்கட்டும். ஆசியா நாட்டில் வறுமைக் கோட்டில் அதிகம் அதிகம் வாழும் மக்கள் தமிழ் நாட்டில் உள்ளனர். ஆனால் இலங்கையில் அவ்வாறு இல்லை என்றார். பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாட்டை இலங்கையில் நடாத்த கிடைத்தமை இலங்கைக்கு மாத்திரமன்றி ஆசியாவுக்கே கிடைத்த ஒரு வெற்றியும் பெரு மையாகும். பொதுநலவாய வர்த்தக பேரவை நடத்தப்பட்டதன் பலனாக இலங்கையில் முதலீடுகள் அதிகரிக்கவுள்ளன. பல நாடுகள் எமது நாட்டில் முதலீடு செய்வது தொடர்பில் வர்த்தக மாநாட்டுக்கு பின்னர் விசாரித்தும் தகவல்களை திரட்டியும் வருகின்றது என்றார்.

2 comments :

Anonymous ,  November 14, 2013 at 7:53 AM  

Our country is much better than our neighbouring country.As the Hon minister Mr. Basil Rajapakse said first wipe out the poverty and the worst caste system from your country.Don't behave like a mirror.

Anonymous ,  November 14, 2013 at 12:28 PM  

TN politicians just open your eyes and see how you can solve these vital problems rather poking your bloody noses into others matters.
It is unimaginable how these problems are so serious in your society.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com