Tuesday, November 12, 2013

ஆளுநரையும் இராணுவத்தினரையும் வடக்கிலிருந்து அனுப்புவது ஏகமனதாகத் தீர்மானம் -வடமாகாண சபை

வட மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியை உடனடியாக பதவியில் இருந்து நீக்கி நிர்வாக அல்லது சிவில் அதிகார மட்டத்தில் உத்தியோகத்தராக கடமை யாற்ற கூடிய சிரேஸ்ட அதிகாரி ஒருவரை வடக்கு ஆளுனராக நியமிக்க கோரி வடமாகாண சபையில் இன்று ஏகமனதாக தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

முன்னதாக ஆளுநர் சந்திரசிறியுடன் ஒன்று கூடி குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்ட உறுப்பினர்கள் அவர் பேரவையிலிருந்து வெளியேறிய பின்னர் அவரை வீட்டுக்கனுப்பும் தீர்மானத்தையும் கொண்டுவந்திருந்தினர்.

இன்று நடைபெற்ற வடக்கு மாகாண சபையின் இரண்டாவது அமர்வில் வடக்கு ஆளுனர் சந்திரசிறி சில உறுப்பினர்களின் பகிஸ்கரிப்புக்கு மத்தியில் கலந்து கொண்டு உரையாற்றிவ் சென்ற நிலையில் மதிய வேளையில் ஆளுநருக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

வட மாகாண ஆளுனர் சந்திரசிறியை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என, வட மாகாண சபையில் யாழ்.மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தும் மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான சயந்தனால் முன்மொழியப்பட்ட தீர்மானம் முல்லைத்தீவை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர் ரவிகரனால் வழிமொழியப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இத் தீர்மானத்தை வழிமொழிந்து உரையாற்றிய சட்டத்தரணி சயந்தன் வடமாகாண சபைக்கு ஆளுனராக இராணுவ அதிகாரியல்லாத சிவில் அதிகாரி ஒருவர் நியமனம் செய்யப்பட்டு நிர்வாக கருமங்கள் முன் எடுக்கப்பட வேண்டும் என்றும் இராணுவ அதிகாரி ஒருவர் ஆளுனராக நியமிக்கப்படுவதை எப்பொழுதும் தமிழ் மக்கள் விரும்மபமாட்டார்கள் எனவும் தெரிவித்திருந்தார். இந்த வகையில் மக்களது உணர்வுகளை புரிந்து கொண்டு செயற்ப்பட வல்ல ஒருவரே வடக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

8 comments :

Anonymous ,  November 12, 2013 at 2:43 PM  

Whatever is,

We have to get along with the central government for the full benefits of our province and the people.

In fact, we can't achieve anything in the way of opposition, disagreement and bitterness.
We should change our usual animosity and bellicosity attitudes.

கரன் ,  November 12, 2013 at 2:56 PM  

வட்டுக்கோட்டையிலும் தீர்மானம் நிறைவேற்றுனவங்கள் தெரியும்தானே.

அதாவது பெட்டை கோழி கூவி பொழுது விடியாது என்று சொல்றன்.

Anonymous ,  November 12, 2013 at 7:38 PM  

They start the drama with the same old stunts,something that is done in order to attract people's attention.
How we would say it is totally a publicity stunt.A stupid act.Their action is utterly stupefying.We are clear that the progress of the PC would be stupefyingly dull.We cannot achieve anything because we have a bunch of...............!it is curse to the tamil society.

Anonymous ,  November 12, 2013 at 11:42 PM  

Cheetting TNA Group, will use there valiable time those kind of matters, becouse TNA wants to pas there period. Then thay can sitt on there stol and make Tamils fools,

THIS IS A LTTE TERRORIST TAMIL NATIONAL ALIANCE!!

See See , there are only 4 years, so thay can pas easially there time to make tamils fool!!

Anonymous ,  November 13, 2013 at 12:35 AM  

புலிகளின் ஒவ்வொரு முட்டாள் தனமான செயல்பாடுகளின் விளைவாக மக்கள் இதுவரைக்கும் கண்டது அழிவுகளும், இழப்புக்களும், துன்ப, துயரங்களுமே தவிர உருப்படியாக ஒன்றுமில்லை.
எனவே மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி விடக்கூடாது.

மதிப்புக்குரிய நீதியரசர் விக்கினேஸ்வரனை முதல்வராக தெரிந்தெடுக்கும் போது, புலிகளினால் அடக்கி ஆளப்பட்ட TNA க்கும் ஒரு சந்தர்பத்தை வழக்கும் நோக்கிலேயே தமிழ் மக்கள் TNA அங்கத்தினரை தெரிவு செய்தார்கள.

புலிகளின் அழிவுக்கு பின்னர் திருந்தி நடப்பார்கள், மக்களை மதித்து சேவை செய்வார்கள் என்று நினைத்துகொண்டிருந்த ஈழத்து தமிழ் மக்களுக்கு, பதவிகள் கிடைத்ததும் புலிகளின் பாணியில் நன்றி கெட்ட துரோக செயல்களை செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

ஈழத்து தமிழ் மக்கள், இப்போ தங்களின் தவறான முடிவுகளை இட்டும், TNA யின் நம்பிக்கை துரோக செயல் பாடுகளையிட்டும் மிகவும் கவலையடைந்துள்ளார்கள்.

Anonymous ,  November 13, 2013 at 8:01 AM  

Trusting the shit TNA is something like being inside a devils workshop
Demons devils and satans cannot bring us any prosperity.But for viewing purposes their actions may be very colourful.

Anonymous ,  November 13, 2013 at 9:56 AM  

They try to send the army out of northern province in order to create a unstable situation.They look for a disorderly sitation and to reoranize violent activites in random around the northern province.So it would be easy for them to condemn the government and at the same time to encourage the violence,after all it is for power and a political game too.

Anonymous ,  November 13, 2013 at 11:48 AM  

Sending the army Navy and airforce
out of NP may cause severe difficulties to the people.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com