Monday, November 4, 2013

சிறிதரனின் கருத்தால் அதிர்ச்சியில் கூட்டமைப்பு தலைவர்கள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் கருத்தால் கூட்டமைப்பின் தலைவர்கள் குழம்பி போயு ள்ளனர். கூட்டமைப்பின் தலைவர் யார்?, கூட்டமைப்பு தொடர்பான தீர்மானங்களை தமது இஸ்ரத்திற்கு எடுக்கலாமா? போன்ற சந்தேகங்களை ஏற்படுத்தியுள் ளதாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெறவுள்ள நிலையில் சிறிலங்கா அரசின் அத்துமீறல்களையும் நிலஅபகரிப்பு, சிங்கள குடியேற்றம், இசைப்பிரியாவின் கொலை என்பவற்றை கண்டித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் மாபெரும் அறவழிப் போராட்டங்களை நடத்தப் போவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு போராட்டங்களை நடத்துவது தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்கும் நோக்கில் அவர்களை மாயையினுள் வைத்திருப்பதற்காக என்று அனைத்து மக்களுக்கும் தெரிந்திருந்தாலும் இது தொடர்பாக எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கட்சித் தலைமைகளிடமும் கலந்தாலோசிக்காது தன்னிச்சையாக சிறிதரன் கருத்தை வெளியிட்டுள்ளமை கட்சி தலைவர்களிடத்திலும் பாராளுமன்ற உறுப்பினர்களிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொந்தமாக தனது ஏற்பாட்டில் எந்தபொரு போராட்டத்தையும் நடத்த முடியாத சிறிதரன் இவ்வாறு அறிக்கை விடுவது கேலிக்குரியது என்கின்றார் மாகாணசபை உறுப்பினர் ஒருவர். இது தொடர்பில் அவர் கூறுகையில், சிறிதரன் அவர்களின் ஏற்பாட்டில் நிலஅபகரிப்புக்கு எதிராக முறுகண்டிப் பிரதேசத்தில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டதாகவும் அதில் அவரது சார்பாக 15 பேர் மட்டுமே கலந்து கொண்டதாகவும் தெரிவித்ததுடன் கிளிநொச்சி நகரில் பல்கலை கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னனி மேற்கொண்ட போராட்டத்தின் போது அதை குழப்பும் வகையில் செயற்பட்டதுடன் கரைச்சி பிரதேசசபை கட்டத்தில் மறைந்திருந்து வேடிக்கை பார்த்தவர் இப்ப ஆர்பாட்டம் நடத்தப் போறாராம் என அவர் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் தலைமையை சம்மந்தனுக்கு பின்னர் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனேயே சிறிதரன் செயற்படுவதாகவும் தனக்கு சார்பானவர்களை கூட்டமைப்புக்குள் வளைத்து வைத்திருப்பதாகவும் தெரியவருகிறது.

5 comments :

Anonymous ,  November 4, 2013 at 6:19 PM  

You have taken the scorpian inside your VERTIES.What it will do ? it will do its job.Keep on going.

Anonymous ,  November 4, 2013 at 7:04 PM  

இவர்களுக்கு படிப்பு, தராதரம், திறமை, அந்தஸ்து, அனுபவம் என்று ஒன்றுமில்லை.
ஆனாலும், அன்றைய தமிழீழ இயக்கங்களிருந்து பின்னர் புலிகளுக்கு கூலிகளாக இருந்து கொண்டு கிரிமினல் வேலைகளை செய்து, தமிழ் மக்களை ஏமாற்றி தங்களின் வயிற்றை நன்றாக வளர்த்த ஆசாமிகள்.

இவர்கள் எல்லோரும் இன்றும் உயிரோடு தப்பியிருப்பதே இவர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாரம். ஆனாலும், இன்றுவரை அதை உணர்ந்து திருந்துவதாக இல்லை.

அதற்கு மாறாக, மீண்டும் ஒரு இருண்ட உலகிற்கு தமிழ் மக்களை வழி நடத்தி, மாயாஜால விளையாட்டுகளை தொடங்கி, தப்பியிருக்கும் தமிழ் மக்களையும், மிஞ்சியிருக்கும் தமிழ் மண்ணையும் அழித்து, நாசமாக்கி மீண்டும் வழமைபோல்,
தங்களின் சுயநல சொகுசு வாழ்க்கைக்கு திட்டம் போடுகிறார்கள்.

இனிவரும் காலங்களில், பகுத்தறிவுள்ள தமிழன் மட்டுமல்ல, ஐந்தறிவுள்ள நாய் கூட அந்த கிரிமினல் கரிதரன்கள் பின்னால் செல்லாது.

Anonymous ,  November 4, 2013 at 7:12 PM  

இவனுக்கு படிப்பு, தராதரம், திறமை, அந்தஸ்து, அனுபவம் என்று ஒன்றுமில்லை.
ஆனாலும், அன்றைய தமிழீழ இயக்கங்களிருந்து பின்னர் புலிகளுக்கு கூலிகளாக இருந்து கொண்டு கிரிமினல் வேலைகளை செய்து, தமிழ் மக்களை ஏமாற்றி தங்களின் வயிற்றை நன்றாக வளர்த்த ஆசாமி.

இவன் எல்லோரும் இன்றும் உயிரோடு தப்பியிருப்பதே இவனுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாரம். ஆனாலும், இன்றுவரை அதை உணர்ந்து திருந்துவதாக இல்லை.

அதற்கு மாறாக, இவன் மீண்டும் மாயாஜால விளையாட்டுகளை தொடங்கி, தமிழ் மக்களை ஒரு இருண்ட உலகிற்கு வழி நடத்தி, தப்பியிருக்கும் தமிழ் மக்களையும், மிஞ்சியிருக்கும் தமிழ் மண்ணையும் அழித்து, நாசமாக்கி வழமைபோல், தனது சுயநல சொகுசு வாழ்க்கைக்கு திட்டம் போடுகிறான்.

இனிவரும் காலங்களில், பகுத்தறிவுள்ள தமிழன் மட்டுமல்ல, ஐந்தறிவுள்ள நாய் கூட அந்த கிரிமினல் கரிதரன் பின்னால் செல்லாது.

Anonymous ,  November 4, 2013 at 8:57 PM  

Anybody remember that one lady With 1year boy tald her histry With Sritharan (Group) several months ago???

Husbund was Arrested by S.L Army and Sritharan wants to help her for release him, but - what he and hims Group done for that lady????

This histry was seen by many many thausands of world tamils.

This is a SRITHARAN.

Anonymous ,  November 5, 2013 at 6:22 AM  

This is the great failure of the voters.Do they know the purposes of
the valuable votes...? Do they know how they make use of them?Just blind folded voting is a curse to our society.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com