Tuesday, October 8, 2013

பாக்கிஸ்தானின் LeT தீவிரவாதிகளுக்கு இலங்கை பாதுகாப்பான இடமாக மாறிவருகின்றதா ? இந்தியாவிற்கு குலை நடுங்குகின்றது!

பாக்கிஸ்தான் பிரதமரான நவாஸ் ஷெரிப்பின் சகோதரரான ஷாபாஸ் செரீப்பின் ஆதரவைப் பெற்ற பாக்கிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான லஸ்கர்-ஈ-தைபாவின் (LeT) மிகப் பாதுகாப்பான இடமாக இலங்கை மிக வேகமாக மாறிவருகின்றது என்று இந்திய பத்திரிகை ஒன்று கூறியுள்ளது.

இலங்கையில் குறிப்பாக தூரப் பிரதேசங்களில் உள்ள நகரங்கள் மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளில் தனது அடித்தளத்தை எப்படி அது அமைத்து வருகின்றது என்ற விபரத்தை பெயர் குறிப்பிட விரும்பாத மூன்று வல்லுநர்கள் விளக்கியிருக்கிறார்கள்.

சுற்றுலா என்ற போர்வையில் இன்ரர் சேவிஸ் இன்ரெலிசன்ஸ் (ISI) என்ற பாக்கிஸ்தானில் உளவுப் பிரிவுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகள் அடிக்கடி இந்த இடங்களுக்கு விஜயம் செய்கின்றார்கள்.. இலங்கையின் பகுதிகளில் LeT ஒர பாதுகாப்பான வலயத்தை உருவாக்குவதற்கு பாக்கிஸ்தானின் இராணுவம் உதவி செய்கின்றது என்பதில் சநதேகமில்லை என்று நிபுணர்களில் ஒருவர் அந்த வாராந்த இதழிடம் கூறியுள்ளார்.

தற்பொழுது அவர்களின் இந்த சிறுமையங்கள் இலங்கையின் ஆள்புலத்துக்குள் தாக்குதல்களை நடாத்துவதற்கு திட்டமிடவில்லை. ஆனால், இலங்கையின் ஆள்புலத்தை தமது தளமாகவும் இந்தியா மற்றும் ஐரோப்பாவைத் தாக்குவதற்கு திட்டமிடும் இடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இலங்கையில் காணப்படும் மேற்கத்திய கலாச்சார உடைகள், பன்றி இறைச்சி கலந்த உணவு மற்றும் மதுபானம் என்பன பழைமைவாத மற்றும் தீவிர முஸ்லிம் பிரிவுகளுக்கு அருவருப்பானவை. எனினும், நிச்சயமாக வஹாபிக்களான ஆண்கள் மற்றும் பெண்கள் அண்மையில் பெருவாரியாக இலங்கைகு விஜயம் செய்துள்ளனர். எழும் சந்தேகம் என்னவென்றால், அவர்கள் விடுமுறைக்காக இங்கு வரவில்லை மாறாக மற்றவர்களைச் சந்தித்து மற்ற நாடுகளைத் தாக்குவதற்கு திட்டம் தீட்டுவதற்காகவே என்பதாகும் என்று அந்த நிபுணர்கள் கூறியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com