Tuesday, October 22, 2013

தூத்துக்குடி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமெரிக்க கப்பலின் பொறியியலாளர் மீண்டும் தற்கொலை முயற்சி!

தூத்துக்குடி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட் டிருந்த அமெரிக்க கப்பலின் தலைமை பொறியியலாளர் நேற்று மீண்டும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலை 5.30 மணிக்கு தலைமை பொறியியலாளர் வாலொரி தனது சேட்டை கழற்றி கழுத்தில் இறுக்கமாக கட்டி அங்கிருந்த கம்பியில் தொங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதைப் பார்த்த சக ஊழியர்கள் கூச்சல் போடவே ரோந்து பணியில் இருந்த சிறைக் காவலர்கள் ஓடி வந்து வாலொரியை மீட்டு சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டொக்டர் கப்பலிலும், சிறையிலும் பொறி யியலாளர் அடைக்கப்பட்டதால் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவருக்குத் தேவையான சிகிச்சை அளிக்க சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கைது செய்யப்பட்ட 35 பேரில் போல்டவர்ஸ் வில்லியம் இர்விங், நிக்கோலஸ் சிம்சன், ரேமண்ட் டின்டால், நிக் டன், ஜோன் ஆர்மஸ்ட்ராங் ஆகியோர் இங்கி லாந்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை சந்திக்க சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரக அதிகாரிகள் இருவர் நேற்று சிறைக்கு வருகை தர முயற்சி மேற் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

எம்மை தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com