Monday, October 7, 2013

நாட்டு நடப்பு : சோனவ அரசியல் வியாபாரிகளுக்கு காய்ச்சல் தொடங்கிவிட்டதாம் டும் டும் டும் டும். யஹியா வாஸித்-

இந்த சிறிலங்கா சோனவனுகளுக்கிட்ட ஒரு குட்டிப் பழக்கம் இருக்கின்றது. எல்லாத்தையும் தூரநின்று வெரல சூப்பிக்கொண்டு. ஒன்றுமே தெரியாத மாதிரி வேடிக்கை பார்ப்பானுகள். அடுத்தவன் குய்யோ முறையோ என அடிச்சி தங்களுக்குள் மாய்ஞ்சி கொண்டிருப்பான். இவன் அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல் அறிக்கைவிட்டு ஆரவாரமும் செய்வான். அப்புறம் எதிர்ப்பக்கம் ஒருமாதிரியாக பூசி மெழுகுகின்றார்களாம், ஒப்பந்தமோ ஏதோ கத்தரிக்காயோ எழுதப்போகின்றார்களாம் என்று கேள்விப்பட்டதும் ஓடிப்போய் நாங்களும் ஒங்கொளோடதான் எனகாலில் விழுந்து நக்கவும் தயங்கமாட்டான்.

ஏற்கனவே அஸ்றப் ஹாஜியார் ஒரு தரமும். அவரது அடிப்பொடிகள் இன்னொருதரமும் முள்ளிவாய்க்கால் போய் கோழி புரியாணி திண்ட கதையச்சொன்னன். அடேயப்பா அந்தக்காட்டுக்குள்ள எங்களுக்கு ஹலாலாக கோழி அறுத்து தந்தனர் எங்களது தங்கத்தம்பிகள் என நக்கித்தின்ற கதையும் சொன்னார்கள் இந்த சோனவ அரசியல்வாதிகள்.

அப்புறம் முழுத்தமிழினமும் மண்ணோடு மண்ணாக, கிளிநொச்சி சேறோடு சேறாக நாசமாக்கப்பட்டது. மூச். ஒருசோனவ அரசியல்வாதியும் வாய் திறக்கல. அதுமட்டுமா கிழக்கு மாகாண தேர்தலில் தமது தன்மான உணர்ச்சிகளை கொட்டி தீர்த்து மொத்த தமிழினத்தின் முகத்திலும் கரியைப்பூசி மீண்டும் மாற்றான் வீட்டுத் தோட்டத்துக்கே மலம் திங்கச் சென்றன எமது கொள்கைக்குன்றுகள்.

இப்போது மீண்டும் ஒரு சக்கரச்சுழற்சி. தான் ஆடாவிட்டாலும் தம்தசை ஆடும் என்று சொல்லிவிட்டும், சொல்லாமலும் செத்துப்போனவர்களின் ஆன்மாக்கள் எழும்பிநின்று வடக்கில் 30 கதிரையை தூக்கி நிமிர்த்தி வைத்திருக்கின்றன. நம்மவர்கள் இப்போது ஆட்டத்த தொடங்கிவிட்டார்கள். காக்கா ஹசன் அலி அறிக்கை விடுவதும், தம்பி ஜெமீல் குறைநிரப்பு பிரேரனை கொண்டுவருவதும், யாரோ ஒருவர் எங்களையும் தலைவர் சம்பந்தர் அரவணைக்க வேண்டும் என ஊமைக்குசும்பு பண்ணுவதும் என வியாபாரம் களைகட்டத்தொடங்கிவிட்டது.

தமிழ் அரசியல்வாதிகளே சாக்கிரதை, எங்க சாதிக்காறனிடம் கொஞ்சம் அதிகமாகவே சாக்கிரதையாக இருங்கோ. அப்புறம் அப்பாவி முஸ்லீம்கள தொப்பி மாத்திகள் என உங்கள் சமூகம் திட்டக்கூடாது. வீஆர் ஓள்வேஸ் வித் தமிழ் இனசன்ட் பீபள்ஸ்.

சுன்னத்து வைத்த அஸ்வர் ஹாஜியாரை தேடுகின்றார்கள்.

போனமாதத்துக்கு முந்திய மாதம். மீயெல்ல என்ற கிராமத்தில் ( இது மாத்தறை மாவட்டத்தில் ஹக்மனவுக்கும் வலஸ்முல்லவுக்கும் இடையில் இருக்கின்றது ) ஒரு குட்டி கலவரம். அதாவது இந்த கிராமங்களில் ஆங்காங்கேயும், நிரந்தரமாகவும் முஸ்லீம்கள் குடியிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இங்குள்ள முஸ்லீம்களின் பிரதான தொழில் அப்பகுதியிலுள்ள சிங்கள மக்களிடம் ஆடு மாடுகளை வாங்கி விற்பனை செய்வது. அநேகமாக அறுவைமாடு வியாபாரம் இப்பகுதியில்தான் மிக மிக அதிகம்.

அன்றொருநாள் பொதுபல சேனாவின் அங்கத்தவர்கள் சில தேரர்களையும் அழைத்துக்கொண்டு அப்பகுதிகளில் உள்ள முஸ்லீம்களின் வீடுகளிலும், காணிகளிலும் கட்டப்பட்டும், மேய்ந்து கொண்டும் இருந்த மாடுகள் பலவற்றை பலவந்தமாக கட்டியிழுத்துச்சென்று அப்பகுதி பொலிசாரிடம் ஒப்படைத்து உள்ளனர், பொலிசார் அம்மாடுகளை தேரர்களிடம் ஒப்படைத்து அங்குள்ள சிங்கள மக்களுக்கு, இலவசமாக வளர்ப்பதற்காக வழங்கியுமுள்ளனர்.

இதனால் பாதிப்படைந்த திக்வெல்லயைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் சகோதரர், தான் பாலுக்காக வைத்திருந்த மாட்டை பொலிசாரும் தேரர்களும் திருடிச்சென்றுவிட்டார்கள். எனக்கு மாடு வேண்டும் என வழக்கு தொடர, நீதிவென்று, தீர்ப்பு மாட்டை கொடு என வந்தது. இதைப்பார்த்து மாட்டை இழந்த மற்றவர்களும் வழக்கு தொடர, பொலிசாரும் நமது மதிப்புக்குரிய தேரர்களும் மாத்தறை முழுக்க ஒரு மாதகாலமாக மாடு தேடிக்கொண்டிருக்கின்றனர். இதில் லேட்டஸ் செய்தியென்னவென்றால் மாட்டை இலவசமாகப் பெற்ற கிராப்புற சிங்கள மக்கள் அந்த மாடுகளை மீண்டும் இறைச்சிக்கடைக்காறர்களுக்கே விற்றுத் தொலைத்துவிட்டார்கள். கோர்ட் தீர்ப்பின்படி மாடுதேடும் படலம் இன்னும் தொடர்கின்றது.

இந்த செய்தி நமது மதிப்புக்குரிய சுன்னத் வைத்துள்ள அஸ்வர் ஹாஜியாருக்கு தெரியுமோ என்னவோ தெரியாது. யாராவது சுன்னத்து வைத்துள்ளவர்கள் இதைப்பார்த்தால், சுன்னத்து வைத்துள்ள ஹாஜியாருக்கு இதை போர்வேர்டு பண்ணி, சுன்னத்து வைத்துள்ள மாற்றுமத தேரர்களூடாக இப்பிரச்சனையை தீர்த்து வைக்கவும் பிளீஸ்.

( நாட்டு நடப்புகள் தொடரும் )

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com