Sunday, October 27, 2013

ஏன் எங்களுக்கு வாகனம் ஓட்ட முடியாது? - ரியாதில் இரு பெண்கள் எதிர்ப்பு! (காணொளி இணைப்பு)

பெண்கள் வாகனம் ஓட்ட முடியாது என்ற தடைக்கு எதி ராக, சவுதி அரேபியப் பெண்கள் இருவர் ரியாத் நகரினுள் வாகனம் ஓட்டித் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். சவுதி அதிகாரிகளின் ஆணையை கவனத்திற்கொள்ளாது அவ்விருவரும் ரியாத் நகரினுள் வாகனம் ஓட்டிச் சென்ற முறை இணையத்தளத்தில் வலம் வந்தி ருப்பதால் முழு உலகினதும் கவனம் அவ்விடயம் தொடர்பில் சென்று ள்ளது.

சவுதி அரேபியாவின் உள்விவகார அமைச்சு இதுதொடர்பில் குறிப்பிடும் போது, யாரேனும் ஒருவர் இந்த தடையை கவனத்திற்கொள்ளாது செயற்படுவாராயின் அவர் எதிராக ஷரீஆச் சட்டத்திற்கு எதிராக நடந்தவராகக் கொள்ளப்பட்டு, அவருக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 17000 இற்கும் மேற்பட்ட மக்கள் கையொப்பமிட்ட மனு ஒன்று சவுதி அரசாங்கத்தின் அதிகாரிகளிடம கையளிக்கப்பட்டு,

பெண்களுக்கும் வாகனம் ஓட்டிச் செல்வதற்கு அநுமதி தர வேண்டும். அவ்வாறு முடியாதுவிடின் அதற்கான தகுந்த காரணத்தைத் தெளிவுறுத்துமாறு கோரியுள்ளது.




(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com