Tuesday, October 22, 2013

ஜனாதிபதியின் அதிகாரம் நீதி அமைச்சருக்கு

சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்கு தற்போது ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை, நீதி அமைச்சருக்கு கைமாற்றும் யோசனையை முன்வைத்துள்ளதாக முன்னாள் நீதி அமைச்சர் மிலிந்த மொறகொடவினால் நியமிக்கப்பட்ட, குழுவின் தலைவரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியுமாகிய ஹெக்ட யாப்பா தெரிவித்தார்.

அது போல சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் நலன்தரும் யோசனைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஹெக்ட யாப்பா மேலும் கூறினார்.

இந்த யோசனைகள் அடங்கிய அறிக்கையை நீதி அமைச்சர் ஹக்கீம் நேற்று (21) பெற்றுக் கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், புதிய யோசனைகளை பாராளுமன்றில் சமர்ப்பித்து அமைச்சரவை அனுமதி பெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பல வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நன்நடத்தையைக் கொண்ட சிறைக் கைதிகளை தண்டனைக் காலத்திற்கு முன்னதாகவே விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் இந்த கைதிகள் குறித்து அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன் நடத்தைகளைக் கொண்ட சிறைக் கைதிகளை விடுதலை செய்யக் கூடிய அதிகாரம் நீதி அமைச்சருக்கு வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com