Tuesday, October 1, 2013

மனிதனை போன்றே ரோபோட்டுக்கும் மூளை!

ரோபோவும் மனிதனை போல தன்னிச்சையாக செயல்படக்கூடியவாறு மூளையை அமெரிக்க புகழ் பெற்ற இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி ஜகன்னாதன் சாரங்கபாணி கண்டுபிடித்துள்ளார்.

மிசோரி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து பெருமை பெற்ற ஜகன்னாதன், ரோபோக்கள் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருவதுடன் இவர் தலைமையிலான குழுவினர் பல வகையில் ரோபாட் செயல்பாடுகளை கணக்கிட்டு அதற்கு தனி கட்டளைகளை பிறப்பித்து, தானியங்கி முறையில் மட்டுமின்றி சுயமாக சிந்தித்து குறைந்தபட்ச செயல்பாடுகளை மேற்கொள்ள வைத்து ஜகன்னாதன் வெற்றி கண்டுள்ளார்.

ரோபாட் சுயமாக சிந்தித்து செயல்படக்கூடிய அளவில் அதற்கு மனிதர்களுக்கு உள்ளதை போல மூளையை கண்டுபிடித்துள்ளதுடன் எல்லா கன்ட்ரோல்களையும் மூளையில் வைத்து மனிதனை போலவே சிந்திக்கும் அளவுக்கு, புரிந்து கொள்ளும் அளவுக்கு ரோபாட்டின் செயல்பாட்டையும் மாற்றியமைத்துள்ளார்.

சோதனை ரீதியாக ரோபாட்டுக்கு மூளையை பொருத்தி செயல்படுத்தியபோது, ரோபாட்டுக்கு இலக்கை மட்டும் கமாண்ட் செய்து விட்டால் அதை அடைய மனிதனை போல தானாகவே சிந்தித்து, செயல்பட முடியும் என்பதில் ஏறக்குறைய வெற்றி கண்டுள்ளார்.

ரோபாட்டுக்கு அவர் கண்டுபிடித்த மூளையை பொருத்துவதில் படிப்படியாக மேலும் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த ஜகன்னாதன், எதிர்காலத்தில் ரோபாட்டால், மனிதனை போல சிரிக்க முடியும், கோபப்பட முடியும் ஏன் முகபாவத்தை கூட காட்ட முடியும் பாலம் கட்டுவது, மேம்பாலம் அமைப்பது போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் பத்து புல்டோசர்களை இயக்க வேண்டும் என்றால் அதில் உள்ள பழுதுகளை கண்டுபிடிக்க வேண்டும், அதை சரி செய்யவும் வேண்டும் என்றால் இந்த மூளையுள்ள ரோபாட்களை பயன்படுத்தலாம், அது தான் என் குறிக்கோள் என்று கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com