Tuesday, September 3, 2013

அமெரிக்கா தாக்குதல் திட்டங்களை செயல்படுத்த இருக்கையில் பிரித்தானிய பாராளுமன்றம் சிரிய நடவடிக்கைக்கு எதிராக வாக்களிக்கிறது. By Chris Marsden and Julie Hyland

டேவிட் காமெரோனின் கன்சர்வேடிவ்-லிபரல் ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்திற்கும், அமெரிக்காவிலுள்ள ஒபாமா நிர்வாகத்திற்கும் ஓர் அதிர்ச்சி தரும் பின்னடைவு என்னும் முறையில், பிரித்தானியவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் முயற்சியான சிரியாவில் இராணுவத் தலையீட்டிற்கு கொள்கையளவில் ஒப்புதல் பெறுதல் என்னும் முயற்சியை எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

காமெரோன் பெரிதும் வேதனையுற்றுள்ளார், கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் என்னும் முறையில் அவர் வருங்காலம் உறுதியற்றதாகிவிட்டது. ஒபாமா நிர்வாகம் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளை பொறுத்தவரை, சிரியாவிற்கு எதிரான அவற்றின் போர் உந்துதல் செல்வாக்கிழந்து CIA, M15, மொசாட் இன்னும் பிற உளவுத்துறை அமைப்புக்கள் தயாரித்த குற்றம் சார்ந்த சதித்திட்டம் என அம்பலப்படுத்தப்பட்டுவிட்டது. கூத்தாவில் இரசாயனத் தாக்குதலை அவை பற்றியெடுத்து --அநேகமாக அமெரிக்க ஆதரவுடைய எழுச்சியாளர்களாலேயே நியாயப்படுத்த காரணம் என செய்யப்பட்டிருக்கலாம்-- ஆட்சி மாற்றத்தை சிரியாவில் தீவிரப்படுத்தவும் அதை ஒட்டி ஈரானை தனிமைப்படுத்தவும் மத்திய கிழக்கின் செழிப்பான எண்ணெய் வளத்தை அமெரிக்கா மேலாதிக்கம் கொள்ள ஒரு வாய்ப்பு என்றும் கொண்டன.

வெள்ளை மாளிகை வியாழன் அன்று குண்டுத் தாக்குதலை தொடர்வது என்ற திட்டத்தை கொண்டுள்ளதாக குறிப்புக் காட்டியுள்ளது. வியாழன் இரவு நியூ யோர்க் டைம்ஸ், “நிர்வாக அதிகாரிகளின் ஆதரவு குறைந்துள்ளது திரு ஒபாமாவை தாக்குதலை நடத்தும் முடிவில் இருந்து மாற்றாது…. அனைத்துக் குறிப்புக்களும் தாக்குதல் ஆகஸ்ட் 21 தாக்குதல் குறித்த ஐ.நா. விசாரணையாளர்கள் நாட்டை விட்டு நீங்கியதும் நடத்தப்படலாம் எனக்காட்டுகின்றன. அவர்கள் சனிக்கிழமை டமாஸ்கஸை விட்டு நீங்க உள்ளனர்.” என்று கூறியது.

தேசிய பாதுகாப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் கைட்லின் ஹேடன் கூறினார்: “ஜனாதிபதி ஒபாமாவின் முடிவெடுக்கும் திறன் அமெரிக்காவின் சிறந்த நலன்களுக்கு வழிகாட்டும் நெறிகளில் இருந்து இருக்கும். அமெரிக்காவின் அடிப்படை நலன்களுக்கு ஆபத்து உள்ளது என்று அவர் நம்புகிறார், மேலும் இரசாயன ஆயுதங்கள் குறித்த சர்வதேச நெறிகளை மீறுபவர்கள் அதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் நம்புகிறார்.”

அமெரிக்க இராணுவம் மத்தியதரைக் கடலில் ஐந்தாவது அழிக்கும் கப்பலை நகர்த்தியுள்ளது; அதில், சிரியா மீது எத்தகைய தாக்குதலையும் நடத்த பயன்படுத்தக்கூடிய க்ரூஸ் ஏவுகணைகள் உள்ளன.

பாராளுமன்றத்தில் எதிர் வாக்குகளையும் மீறி, பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் பெரும்பாலான மக்களுடைய எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா போரைத் தொடர விரும்பினால், அது ஹிட்லர் சகாப்தத்திற்குப்பின் அப்பட்டமான சர்வதேச காடைத்தனமாகும்.

இராணுவத் தாக்குதல்கள் விரைவில் ஒரு பிராந்திய, ஏன் உலக மோதலாகவும் மாற வழிவகுக்கும். இதை எதிர்கொள்ளும் வகையில் ஈரான் இஸ்ரேல் மீது தாக்க இருப்பதாக அச்சுறுத்தியுள்ளது, புதன் அன்று ரஷ்யா அதன் கப்பல்களை மத்தியதரைக் கடல் பகுதிக்கு அனுப்பியது.

ஏற்கனவே புதன் அன்று காமெரோன் அரசாங்கம் அதன் திட்டமான நேற்றைய மறுவாக்குத் திட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவருவது என்பதில் இருந்து பின்வாங்கும் கட்டாயத்திற்கு உட்பட்டது; இது இராணுவ நவடிக்கை அனுமதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பாகக் கூறியது. எதிர் கட்சியான தொழிற் கட்சி ஐ.நா. பாதுகாப்புக்குழு சிரியாவில் உள்ள இரசாயன ஆய்வாளர்களைக் கேட்டு அவர்களின் கண்டுபிடிப்புக்களை ஒட்டி வாக்களித்த பின்தான் அதை அனுமதிக்கும் என்று கூறிவிட்டது. இதைத்தவிர கன்சர்வேடிவ்களின் பின் இருக்கைகளில் உட்கார்பவர்களிடம் இருந்தும் பெருகிய எதிர்ப்பு அடையாளங்கள் இருந்தன.

நேற்று பாராளுமன்றத்தை காமெரோன் மறுபடி அழைத்தது; ஐ.நா. பாதுகாப்புக் குழுவும் இங்கிலாந்தின் தீர்மானமான சிரியாவில் “குடிமக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்களுக்கும் ஒப்புதல்”, என்பதன் மீது வாக்களிக்க. இதன் நோக்கம் ரஷ்யா, சீனா மீது அதிக அழுத்தம் கொடுப்பதாகும்—குறைந்தப்பட்சம் தலையீட்டிற்கு பாராளுமன்றத்தில் ஒரு சாதகமான வாக்கு என்பதை இயற்றுவதுடன்—அவை ஐ.நா. நடவடிக்கையை நிறுத்தினால். எப்படியும் பிரித்தானியாவின் பாதுகாப்புக் குழுத் தீர்மானமோ பாராளுமன்ற வாக்கோ காமெரோனுக்கு ஆதரவாகப் போகவில்லை.

நேற்று முழுவதும் காமெரோன் அரசாங்கத்தில் பீதி உணர்வு பெருகியது; ஏனெனில் அதனிடம் பிரித்தானிய, அமெரிக்க அரசாங்கங்களின் கூற்றான சிரிய ஜனதிபதி பஷர் அல்-அசாத்தான் கூத்தா இரசாயன நச்சுத் தாக்குதலுக்கு பொறுப்பு என்பதற்கு சான்றுகள் ஏதும் இல்லை.

தன்னுடைய போர்த்திட்டங்களை நியாயப்படுத்த முற்படுகையில் காமெரோன் தடுமாற்றம் அடைய நேர்ந்தது. உதாரணமாக அசாத்தின் ஆட்சிதான் “சந்தேகத்திற்கு இடமின்றி” டமாஸ்கஸ் மீது இரசாயனத் தாக்குதலை நடத்திய குற்றவாளி என்ற பின் அடுத்த மூச்சில் அவர் “எவர் பொறுப்பு என்பதற்கு 100 சதவிகித உறுதிப்பாடு இல்லை” என்றார்.

இறுதியில் அரசாங்கம் 285 – 272 என்ற வாக்குக் கணக்கில் தோற்றது. தொழிற் கட்சி கொண்டுவந்த திருத்தம், இராணுவத் தலையீடு தோற்கடிக்கப்படுமுன், பல நிபந்தனைகளைப் போட்டது, 332-220 வாக்குகளில் தோற்றுப் போயிற்று. ஆனால் இறுதியில் கன்சர்வேடிவ் எழுச்சிதான் அரசாங்கத்தைத் தோற்கடிக்க வைத்துவிட்டது.

தொழிற் கட்சி தலைவர் எட்வார்ட் மிலிபாண்ட், காமெரோனிடம் பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமல் இராணுவ நடவடிக்கையை தொடக்க அரசாங்கத்தின் சிறப்புரிமை அதிகாரத்தை பயன்படுத்தக் கூடாது என்னும் உத்தரவாதத்தை கேட்டார். அதிர்ச்சியில் இருந்த காமெரோன் கூறினார், “அந்த உத்தரவாதத்தை நான் தருகிறேன்… பிரித்தானிய பாராளுமன்றம், பிரித்தானிய மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் பிரித்தானியா இராணுவ நடவடிக்கை எடுப்பதை விரும்பவில்லை என்பது எனக்குத் தெளிவாகியுள்ளது.”

இச்சூழ்நிலையில் முதலாளித்துவ எதிர் கட்சி குறைந்தப்பட்சம் என்ன செய்திருக்க முடியுமோ, அதைச் செய்தது; அரசாங்கத்தை சர்வதேச நெறிகளின்படி நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஐ.நா. விசாரணை முடிவுகள் வரும்வரை காத்திருக்கும்படியும் கூறியது. தன்னுடைய திருத்தத்தை போர் பற்றிய முடிவிற்கு வர ஒரு “சாலை வரைபடம்” என்று விளக்கிய மிலிபாண்ட், தொழிற் கட்சி அதன் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் இராணுவத் தலையீட்டிற்கு ஆதரவு கொடுக்கும் என்றார்—ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் வேறுபாடுகள் இருந்தாலும்.
ஆயினும்கூட அரசாங்கத்தின் விடையிறுப்பு நச்சுத் தன்மையானதாக இருந்தது. டவுனிங் வீதி, தொழிற் கட்சி தலைவர் அசாத் ஆட்சிக்கு “உதவி செய்கிறது” என்றும் அறிவித்தது. ஒரு பெயரிடப்பட விரும்பாத ஆலோசகர், மிலிபாண்டை முர்டோக் டைம்ஸின் நயமற்ற அடைமொழிகளில் விளக்கினார்.

இத்தகைய சொல்லாட்சி அரசாங்க நபர்களின் பாசிசத் தன்மையைத்தான் காட்டுகிறது; அவர்கள் குற்றம் சார்ந்த அரசியல் தலைமறைவிடத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; அவர்கள் உலகை போர்களிலும், காலனித்துவ ஆக்கிரமிப்புகளிலும் ஆழ்த்த முற்படுகின்றனர்.

ஆரம்பத்தில் காமரோன் அரசாங்கம், ஒபாமா நிர்வாகத்தின் விசுவாசமான அடிவருடியாக உதவலாம் எனத் தெளிவாக எதிர்பார்த்தது. ஆனால் போருக்கு பொதுமக்களின் எதிர்ப்பின் மட்டத்தை அது குறைமதிப்பிட்டுவிட்டது.

தொழிற் கட்சி மற்றும் முன்னர் காமெரோனுக்குச் சவால் விட்ட டேவிட் டேவிஸின் தலைமையில், காமரோனுக்கு எதிராக வாக்களிக்கும் முக்கிய கன்சர்வேடிவ்களின் நடவடிக்கை என்பது, சிரிய நடவடிக்கை குறித்து ஆளும் வர்க்கத்திற்குள் இருக்கும் ஆழ்ந்த பிளவுகளை வெளிப்படுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, சிரியவிற்கு எதிரான போர்த்திட்டங்கள் இன்னும் ஈராக்கிற்கு எதிரான 2003 போர் காட்டிய நீண்ட நிழலில்தான் உள்ளன. கருத்துக்கணிப்புக்கள் சிரியா மீது ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஆதரவு 6 முதல் 11% வரைதான் என்று காட்டின. ஈராக்கின் நச்சுப் படிந்த அரசியல் மரபியம் டமோக்கிள்ஸ் கத்தி போல் தலைக்கு மேல் தொங்குகையில், தொழிற் கட்சி மற்றும் கன்சர்வேடிவ் எழுச்சியாளர்கள் இராணுவ நடவடிக்கையை மற்றொரு வெளிப்படையான பொய்களின் தயாரிப்பின் அடிப்படையில் எடுக்க முடியவில்லை.

கன்சர்வேடிவ்களுக்குள்ளேயே சிரியாவுடனான போர் தொடங்குவது, முழு மத்திய கிழக்கிலும் பரவக்கூடும், மக்கள் ஆதரவு இதற்கு இல்லை என்பது குறித்த கவலைகள் இருந்தன.

முக்கிய ஓய்வு பெற்ற இராஜதந்திர, அரசியல் மற்றும் இராணுவ நபர்களும் இதில் தலையிட்டுள்ளனர்; அதில் ஜெனரல் லார்ட் ரிச்சார்ட் டான்னட்டும் உள்ளார்; இவர் முன்னாள் பிரித்தானிய இராணுவத்தின் தலைவர், காமெரோனின் முன்னாள் இராணுவ ஆலோசகர் ஆவார். பிரபுக்கள் சபையில் நேற்று பேசுகையில் டான்னட் பிரித்தானிய பணிப்பிரிவினர் பொதுமக்கள் ஆதரவின்றி போரில் ஈடுபடும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்படக்கூடாது என்றார்.

எதிர்ப்புக் காட்டும் கன்சர்வேடிவ்கள், ஐ.நா. குறித்து ஆர்வம் காட்டுவதில் இருந்து தொலைவில்தான் இருந்தனர்; சிலர் ரஷ்யா மற்றும் சீனாவைப் பகைத்துக் கொள்வதற்கு எதிராக எச்சரித்தனர். பெரும்பாலனவர்கள் அசாத் ஆட்சிக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களான, டமாஸ்கஸில் இரசாயனத் தாக்குதலுக்குப் அவர்தான் பொறுப்பு என்ற அடிப்படையில் ஒரு போருக்கு ஆதரவு கொடுப்பதை எச்சரித்தனர்.

இத்தகைய கவலைகளின் அடித்தளத்தில் இருப்பது, சிரியாவிற்கு எதிரான போர், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், அல் குவேடாவுடன் பிணைந்தவர்களை அதிகாரத்திற்கு கொண்டு வரும் என்ற ஆழ்ந்த அச்சங்கள் உள்ளன. இதுதான் லிபியாவில் ஏற்பட்ட விளைவு; இது மத்திய கிழக்கு முழுவதையும் உறுதி குலைக்கும்.

பல பாராளுமன்ற உறுப்பினர்கள், முதல் உலகப் போருக்கு வழிநடத்திய நிகழ்வுகளுடன் நேரடி ஒப்புமையைக் காட்டினர். பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிரிய மக்கள் சட்டமன்றத்தின் தலைவரான ஜிகத் அல்லஹம் அனுப்பிய கடிதம் இந்த அடிப்படையில் நேரடி முறையீட்டைக் கொடுத்துள்ளது. டமாஸ்கஸ் தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று மறுத்த அது, “ஆக்கிரோஷ, தூண்டுதலற்ற போருக்கு” எதிராக எச்சரித்துள்ளது; மேலும் “சிரிய இலக்குகளையும் நிறுவனங்களையும் தாக்கி வலுவிழக்கச் செய்தவதின் மூலம் நீங்கள் இயல்பாகவே நம் பொது விரோதியான அல்குவேடா அதன் பிணைப்பு அமைப்புக்களை வலுப்படுத்துவீர்கள்.” என்றும் கூறியது.

ஆஸ்திரிய ஆர்ச்ட்யூக் பெர்டினான்ட் படுகொலையைக் குறிப்பிட்டு—இதுதான் முதல் உலகப் போருக்கு எரியூட்டியது—அல்லஹம் எச்சரித்தார்: “உள்ளூர் சோக நிகழ்வுகள் பிராந்தியப் போர்களாக மாறி உலக மோதலாகவும் வெடிக்கும்….”
போருக்கு ஆதரவு வாதம் என்பது, இன்னும் கடினமாக பிரித்தானியாவின் கூட்டு உளவுத்துறைக் குழு முயற்சியாலும், தலைமை அரசாங்க வக்கீல் டொமினிக் க்ரீவின் சட்டபூர்வ ஆலோசனையாலும் ஆக்கப்பட்டது; இரண்டுமே ஈராக் போரை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட பொய்களை பற்றி எதிரொலித்தன.

கூட்டு உளவுத்துறைக் குழுவின் வாதம் அசாத்தின் ஆட்சி இரசாயன தாக்குதலுக்கு "பெரும் வாய்ப்பு" என்று முடித்தது. மேலும் அது வீடியோ காட்சிகளை “வெளிப்படை ஆதார” சான்றுகளாக கொண்டுள்ளது, அவற்றின் நம்பகத்தன்மை பூசலுக்கு உட்பட்டுள்ளது, மற்றும் எதிர்த்தரப்பு தாக்குதலை நடத்தும் திறனைக் கொண்டிருக்கவில்லை எனக் கூறவும் முடியாது. க்ரீவின் ஆலோசனை, “பாதுகாக்கும் பொறுப்பை” தளம் கொண்டு பிரித்தானியா ஐ.நா. அங்கீகாரம் இன்றி இராணுவ நடவடிக்கையில் பங்கு பெறலாம் என்று மட்டும் கூறியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com