அரசுக்குச் சொந்தமான காணியை அழித்தவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!
அக்கரைப்பற்று, திருக்கோவிலிலுள்ள வட்டமடுவ அரசாங் கத்திற்குச் சொந்தமான பாதுகாப்புக் கானகத்தில் சேனைப் பயிர்ச் செய்கை செய்வதற்காக காட்டினை அழித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் 31 பேரை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும், இன்னும் நூற்றுக்கு மேற்பட்டோர் தப்பியோடிவிட்டதாகவும் அவ்விடத்திற்குச் சமுகமளித் திருந்த அம்பாறை சந்திந்திரிய தேரர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
ஒருசிலர் அரச காணியை பலாத்காரமாகப் பிடித்துக்கொண்டு, அங்கு விவசாயம் மற்றும் சேனைப் பயிர்ச் செய்கை செய்துவருவதாகவும் பொலிஸார் குறிப்பிடு கின்றனர்.
0 comments :
Post a Comment