போர்க் குற்றவியல் ஆய்வு தேவை! என வாய்திறக்கிறார் பிள்ளை.....!
தான் விடுதலைப் புலி ஆதரவாளர் என்பதைப் பலர் நிரூபிக்க முனைந்தாலும் தான் எப்போதும் சுதந்திரமான கருத்துக்களைப் பரிமாற்றிக் கொள்வதற்கே முன்வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம் பிள்ளை குறிப்பிடுகிறார்.
தனது ஒரு வார உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு இன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அமையகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு மிகவும் கொடூரமான அமைப்பு என்பதை அங்கு குறிப்பிட்ட அவர், இலங்கையின் போர்க் காலப்பகுதியில் இடம்பெற்றதாக்க் குறிப்பிடப்படும் குற்றவியல் தொடர்பில் நடாத்தப்படும் தேசிய ரீதியிலான ஆய்வுக்கு மனித உரிமைகள் அமைப்பு தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும் குறிப்பிட்டார்.
என்றாலும், போர்க்குற்றவியல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நம்பகத்தன்மைமிகு ஆய்வினை மேற்கொள்ளாத விடத்து சர்வதேச ரீதியிலான ஆய்வு மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் அவர் தெளிவுறுத்தியுள்ளார்.
நவநீதன் பிள்ளை இன்று தனது உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கையிலிருந்து பயணித்தார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment