Wednesday, July 24, 2013

சாரணர் பேடன் பவல் விருது வவுனியா மாணவனுக்கு

இலங்கை சாரண தலைமைக்கரியலயத்தினால் வழங்கப்படும் திரிசாரண பிரிவின் உயர் விருதான பேடன் பவல் விருதினை வவுனியா விபுலானந்தா கல்லூரியின் பழைய மாணவனும் களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவனுமாகிய திரு. சுந்தரலிங்கம் காண்டீபன் பெற்றுக்கொண்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற சாரண சார்க் நட்புறவு பாசறையிலும் எமது நாட்டை பிரதிநிதித்துவபடுத்தி சென்றதுடன் 2007 ஆம் ஆண்டு சாரணர் உயர் விருதான ஜனாதிபதி விருதினை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவர் விபுலானந்த கல்லூரியின் உதவி சாரண தலைவராகவும், வவுனியா மாவட்ட ஜானதிபதி சாரணர் மன்றத்தின் தலைவராகவும், திரிசாரண உதவி மாவட்ட ஆணையாளராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com