லண்டன் வீதியில் பட்டப் பகலில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் துணிகரம்: ராணுவ வீரர் தலை துண்டித்து படுகொலை
லண்டன் நகரின் உல்விச் வீதியில் ராணுவ வீரர்களின் பாசறை பகுதி ஒன்றுள்ளது. இப்பகுதியின் சாலை வழியே வந்துக்கொண்ருந்த ராணுவ வீரரை வழிமறித்த இருவர் அரிவாளால் அவரது தலையை துண்டித்து வெட்டிக் கொன்றனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த படுகொலையை செய்துவிட்டு தப்பியோட முயன்ற 2 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
குண்டு காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படுகொலை இஸ்லாமிய தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.
இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், போலீஸ் உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார்.
இக்கொலை தொடர்பில் பேசிய கேமரூன் மதரீதியான படுகொலைகள் இஸ்லாத்தின் பெயரினாலேயே இடம்பெறுவதாகவும் , ஆனால் இஸ்லாம் அவ்வாறு தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த படுகொலையின் தொடர்ச்சியாக லண்டனில் வசிக்கும் சிறுபான்மை இனத்தவருக்கான பாதுகாப்பை பலப்படுத்த போலீசாருக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
2 comments :
என்ன கொடுமை இது.
It is a feeling of great sadness,butwhat`s presently happening in Syria
is also shocking. The barberic rebels brutally killing the Syrians and even they have taken the heart from a dead body of a Syrian soldier and ate it just like canibals.Cannibalistic behaviour just spreading around the world.UNO and the West should try to establish peace and harmony and humility in every part of the world.Violence and revenge cannot be a solution to any problem.
Post a Comment