மருத்துவ உலகை அசர வைத்த பிரசவம்!
ஒட்டிய நிலையில் உள்ள இரட்டைக் குழந்தைகளை எவ்வித சத்திரசிகிச்சையுமின்றி இயற்கையான முறையில் பிரசவித்து இந்திய பெண்மணியொருவர் மருத்துவ உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இந்திய மாஹாராஷ்டிரா மாநிலத்தின் , ரயிகாட் மாவட்டத்தில் உள்ள பன்வெல் என்ற இடத்தைச் சேர்ந்த சாலு பவார் என்ற பெண்ணே இக் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
இக்குழந்தைகள் இரண்டும் வயிறு ஒட்டிய நிலையில் பிறந்துள்ளன.
சாலு பவாரின் கணவர் சாரதி என்பதால் அவரது குறைந்த வருமானத்தைக் கொண்டு அவர்களால் பிரசவத்துக்கென வைத்தியசாலைக்குச் செல்ல முடியவில்லை. எனவே வீட்டிலேயே சாகுவுக்கு பிரசவம் நடந்துள்ளது.தற்போது தாயும், குழந்தைகளும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுவாக ஒட்டிய நிலையில் உள்ள இரட்டைக் குழந்தைகள் சிசேரியன் மூலமே பிறக்கின்றன.
எனினும் சாலுவின் விடயத்தில் அது பொய்யாகியுள்ளது. எவ்வித மருத்துவ உதவியுமின்றி இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளார் சாலு.
0 comments :
Post a Comment