தாயைக் கொலை செய்து மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் செல்கையில் உயிரிழப்பு!
களுத்துறை பிட்டிகல பகுதியில் கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டது. இதனையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிட்டிகல பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
குறித்த சந்தேக நபர் பிட்டிகல பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய தாயைக்கொலை செய்து விட்டு மகளை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்தது
இந்நிலையில் குறித்த நபர் தான் கொலை செய்வதற்காக பயன்படுத்திய ஆயுதங்களை மத்தக காட்டுப் பகுதியில் மறைத்து வைத்துள்ளதாக கூறி பொலிஸரை அழைத்துச் சென்ற போது தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார். இதன்போது தடுக்கி விழுந்த குறித்த சந்தேக நபர் தலையில் பலமாக அடிபட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment