Saturday, March 23, 2013

சிரியப் பள்ளிவாசலில் தற்கொலைத் தாக்குதல் - 42 பேர் மரணம்

சிரியாவின் தலைநகரிலுள்ள பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சுன்னி மார்க்க அறிஞரான அஷ்ஷெய்க் முஹம்மத் ஸைத் ராமதான் அல் பூட்டி உட்பட நாற்பது பேர் மரணத்தைத் தழுவியுள்ளதுடன், 84 பேர் கடுங் காயத்துக்குள்ளாகியுள்ளனர்.

டமஸ்கஸிலுள்ள அல் மஸ்ராமுஸ்லிம் பள்ளிவாயலில் இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாக அரச தொலைக்காட்சி அறிவித்தது.

ரொய்ட்டரின் அரபு ஊடகவியலாளர் கமெல் ஸெக்டி டமஸ்கஸிலிருந்து தெரிவிக்கும்போது, ‘தாக்குதல் நடாத்தப்படும்போது பள்ளிவாசலில் இஸ்லாம் பாடம் நடாத்தப்பட்டுக்கொண்டிருந்தாகவும், இறந்தோரில் அதிகமானோர் மாணவர்கள்’ எனவும் குறிப்பிட்டார்.

பள்ளிவாசலில் அவ்வேளை பக்தர்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகவும், சத்தத்தைக் கேட்ட பொதுமக்கள் அது, மோட்டார் தாக்குதல் எனவே நினைத்துள்ளனர். யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச படைகளுக்கும் பிரிவினைவாதிகளுக்குமிடையே அடிக்கடி மோட்டார் தாக்குதல் நடைபெறுவதாக சிரியாவிலுள்ள மனித உரிமைகள் ஆய்வு நிலையம் அறிவித்தது.

83 வயதையுடைய பூட்டி சிரியாவிலுள்ள இஸ்லாமிய விஞ்ஞானச் சங்கத்தின் தலைவராகவும் ஜனாதிபதி பஷார் அஸாத்தின் ஆதரவாளருமாவார். எதிர்க்கட்சியினர் இவரை ‘குப்பைக் கூளம்’ என்றே வர்ணித்து வந்தது. அவர் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு என்றும் கூறி நின்றார். அவரது மரணம் அரசாங்கத்திற்குப் பேரிடியாக மாறியுள்ளது. அப்ஷின் ரட்டன்ஸி ரொய்ட்டருக்கு கருத்துரைக்கும் போது, ‘இது நேட்டோ ஆதரவுடன் ரஷ்ய வலயத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சதிகளின் வெற்றியே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அரச திணைக்களம் பிரிவினைவாதிகளுக்கு நிதி வழங்கும் ரை இந்த பயங்கரவாதச் செயல் நடந்தேறிக் கொண்டேயிருக்கும் என்பது அவரது கருத்து.

(கேஎப்)

1 comments :

Anonymous ,  March 24, 2013 at 9:12 PM  

it is a big surprise why a country`s plight and the suffering of the people are not in the eyes of the human rights organisations ?.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com