Sunday, March 17, 2013

கேப்பாபுலவில் 115 வீடுகள் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுவிழா!

முல்லைத்தீவு, கேப்பாபுலவு மாதிரிக் கிராமத்தில் முதற்கட்டமாக கட்டப்பட்ட 50 வீடுகள் நேற்று(16.03.2013)அமைச்சர் குணரட்னவீரக்கோன்னால் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டதுடன் அதே பகுதியில் மேலும் 115 வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றது.

இங்கு முதற்கட்டமாக கட்டப்பட்ட 50 வீடுகள் கையளிக்கப்பட்டன. 1/4 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு அறைகள், வரவேற்பரை, மலசலகூட வசதிகளுடன் சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான வீடாக ஒவ்வொரு வீடுகளும் அமைந்துளதுடன் இந்தப்பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள அனைவரினதும் வாழ்வாதாரத்துக்காக அக்கிராம வயல் பகுதியில் செய்கைக்கென காணிகள் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை, மேலும் 142 குடும்பங்கள் இப்பகுதியில் மீளக் குடியமர்த்தப்படவுள்ளதுடன் இவர்களில் 126 குடும்பங்கள் உடனடியாக மீழ்குடியேற்றுவதற்காக பதிவுசெய்துள்ளனர்.

நேற்றுக்காலை நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மேஜர் ஜேனரல் மார்க், அமைச்சின் செயலர் ஜனக சுகததாஸ, மேலதிக செயலாளர் நஜிமுதீன், உதவிச் செயலாளர் நிகரில்காந்த், முல்லைத்தீவு அரச அதிபர் என்.வேதநாயகன், ஜனாதிபதியின் இணைப்பாளர் கனகரட்னம், சூரியகுமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com