Monday, February 18, 2013

யுத்தத்தில் வெற்றி என்றாலும் சமாதானத்தில் தோல்வியே! - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

மீண்டும் அடிப்படைவாதக் கருத்துக்களின் மூலம் பல்வேறு பலசோனாக்களை உருவாக்கிக் கொண்டு நாட்டில் பிரச்சினைகளை கட்டியெழுப்பிக்கொண்டு இருப்பதாகவும், யுத்தத்தில் வெற்றியடைந்தமை போற்றத் தக்கது என்றாலும் சமாதானத்தில் வெற்றிகாணப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காபண்டாரநாயக்கா குமாரத்துங்க தெரிவித்தார்.

சொல்ல வேண்டிய விடயத்தைச் சொல்வதற்கும், விமர்சிக்க வேண்டியவற்றை விமர்சிப்பதற்கும் தான் ஒருபோதும் தயக்கம் காட்டுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நடைபெற்ற விழாவொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். விஜய குமாரத்துங்கவின் 25 ஆவது நினைவுகூரலுக்காக அந்நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தபோதும், அந்நிகழ்ச்சில் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பதற்காக உயிர்நீத்த இராணுவத்தினரும் நினைவுகூரப்பட்டனர்.

இலங்கை மக்கள் கட்சி பதவி மோகத்தினால் உருவாக்கப்படவில்லை என்றும் அது சிறந்த குறிக்கோளுடனேயே உருவாக்கப்பட்டதென்றும் முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

விஜய குமாரத்துங்க வடக்கிற்குச் சென்று ஜனநாயகத்தைக் காப்பதற்காக முன்னின்றது எதற்காக? உயர்ந்த குறிக்கோளுக்காகவே அன்றி இனவாதக் குறிக்கோளுடனல்ல என்றும் அவர் அங்கு தெரிவித்தார்.

சிங்கள மற்றும் தமிழ் தலைவர்கள் அடிப்படைவாதிகளாக மாறியதனால் சிங்கள தமிழ் பிளவு உருவெடுத்தது. மீண்டும் அவ்வாறான பிளவுகளும் சண்டைகளும் மூளாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். பௌத்த அடிப்படைவாதிகளானாலும் பிற மத அடிப்படைவாதிகளானாலும் அவர்களை முளையிலேயே கிள்ளியெறிந்து சமாதானத்தையே நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், விஜய குமாரத்துங்கவின் மனிதாபிமானத்துக்குள் அடங்கியிருந்ததது சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் கூடியதொரு சமூகமே என்றும் குறிப்பிட்டார்.

(கேஎப்)

1 comments :

Anonymous ,  February 19, 2013 at 6:31 PM  

During her two terms in the office as an executive Madam president she hasn't achieved anything.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com