மூன்று அம்சக் கோரிக்கையுடன் மன்னார் கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்- ஆதரவாக கடைகளும் அடைப்பு
மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மன்னார் மாவட்டத்தில் கடற்றொழிலாளர்கள் ஆர்ப்hபட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளதோடு, இவ் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக மன்னார் மாவட்ட வர்த்தகர்கள் கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.இப்போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மீனவர்கூட்டுறவு சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்தன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டதோடு ஆர்ப்பாட்டமானது மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்றது.
இந்திய மற்றும் உள்ளூர் இழுவைப் படகுகளின் தொழில் முறைகள் முற்றாக நிறுத்தப்படுதல்,கடற்படையினரின் பாஸ் நடைமுறை நீக்கப்பட்டு அதற்கு பதிலாக கடற்தொழிலாளர் அடையாள அட்டை மாத்திரம் வழங்க வேண்டும்,
சிலின்டர் மூலம் கரையோரத்தில் தொழில் செய்வதை நிறுத்தி ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மாத்திரம் தொழில் செய்ய அனுமதித்தல் ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
0 comments :
Post a Comment