Sunday, January 20, 2013

T.N.A வெளிநாட்டு பயணம் ஆடப்போவது யார்?

அரசு, T.N.A, புலிக்குழு, வெளிநாடா  வெல்லப்போவது யார்

அடுத்த வாரம் தென்னாபிரிக்கா செல்கிறதாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு! ம்... போய்..ய்..? இலங்கை அரசு ஒன்றுக்கும் சரிவராது என்பதை ஒன்பதாவது முறையாகவும் எடுத்துச் சொல்லப் போகிறார்களாம்! ம்... சொல்லி..ஈ..? என்று என்னத்த கன்னையா போலத்தான் இழுத்து நீட்டிக் கேட்க வேண்டியிருக்கிறது.

அரச வெறுப்பையே முதலீடாக வைத்துப் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் ஊடகங்களுக்கு வேண்டுமானால், மார்ச் மாதம் வரைக்கும் பரபரப்புக்கு என்ன செய்வது என்ற அங்கலாய்ப் புக்குப் பயன்படுத்திக் கொள்ள இது ஒரு வாய்ப்பாகலாம்.

தலைவர்கள் தென்னாபிரிக்கா போகிறார்கள் சர்வதேசம் உன்னிப்பாகக் கவனிக்கிறது தமிழ்மக்களுக்கான தீர்வு நெருங்கி வந்துகொண்டிருக்கிறது இலங்கை அரசாங்கம் பயத்தில் நடு நடுங்கி, தலைவர்களின் இந்த முயற்சிகளைக் குழப்புவதற்கு கடும் பிரயத்தனங்களை எடுத்துக்கொண்டிருக்கிறது என்ன இருந்தாலும் மார்ச்சில் இலங்கை மாட்டுப்படப் போவது உறுதி... என்று விதவிதமான தலைப்புச் செய்திகளும், ஆய்வுக்கட்டுரைகளுமாக தமிழ்மக்களின் தலைகளில் மிளகாய் அரைத்துத் தூள் கிளம்பப் போகிறது!

அதற்குமேல் த.தே.கூ.வின் மற்றுமொரு சர்வதேசச் சுற்றுலாவாக இதுவும் சிலபல வீரவசனங்களுடன் இனிது நிறைவேறும். உடனே நாட்டுக்குத் திரும்பாமல், அப்படியே கனடா லண்டனுக்கும் ஒரு டூர் போய்விட்டு வந்தால், அங்குள்ள தமிழர்களுக்கு இவர்களுடன் கூட இருந்து சாப்பிடுவதற்கு ரிக்கெற் போட்டு முடிந்தளவு காசையும் வசூலித்துக்கொண்டு வந்துவிடலாம்.

தீர்வு கிடைத்துவிடக் கூடாதென்பதற்கு தீர்மானகரமாகச் செயற்பட்டுவரும் இவர்களது சர்வதேசப் பேய்க்காட்டலை விளங்கிக்கொண்டு நாம் எப்போது கேள்வி கேட்கப் போகிறோம்? இத்தனை அப்புக்காத்து மூளைகளும் இந்த நீண்ட நெடுங்காலமாக தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கி மெனக்கெட்டு, தீர் வைத் தூரத் தூரவாகத் தள்ளிவிட்டுக்கொண்டே வருவதற்கு இவர்கள் காரணமில்லையா? வேறு யாரோதான் காரணமா?

இலங்கை அரசிடம் பேசிப் புண்ணியமில்லை சர்வதேசம்தான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற மாயமானின் பின்னால் இன்னும் எவ்வளவு காலம்தான் மக்கள் சென்றுகொண்டிருப்பது? நாம் முன்னேறி வளர்ந்து விட்ட விவேக மனிதர்கள். இன்று, ஒருவர் இன்னொருவரை அடக்காமல், ஆனால் இருவரும் சேர்ந்து வாழ்வதற்குரிய தீர்வைக் கண்டுகொள்ள எத்தனையோ வழிகள் முறைகள் உள்ளன.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப் பகிர்வையும் அரசி யல் உரிமைகளையும் பெற்றுக்கொள்ள, முதல் நிபந்தனையாக நாம் நம்மைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். பகையையும் வெறுப்பையும் வீம்பையும் இணக்கமின்மையையும் வெளிப் படுத்தியபடி இருக்கும் கடந்த கால வழிமுறைகளிலேயே நின்று கொண்டு, இங்கு எதுவும் சரிவராது என்ற புலம்பலானது கடைந் தெடுத்த ஏமாற்றுவேலையே தவிர வேறில்லை.

இன்றைய சூழ்நிலைக்கு ஏற்பத்தான் நாம் முயற்சிகளைச் செய்ய வேண்டும். இன்று நமது மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கவில்லை. பதுங்கு குழிகளுக்குள் பாயும் உயிர்ப்பய ஓட்ட மில்லை. இந்த நிலையில், வாய்வீச்சுப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பது, மக்களைத் தொடர்ந்தும் தியாகிகளாக்கிப் பிழைக்கும் ஏமாற்றுத்தான்! அவர்களைத் துயரங்களில் அழுத்திக் கதிரை அரசியல் செய்ய எண்ணும் குரூரம்தான்.

மக்களின் அன்றாடத் துன்பங்கள் தெரியாத, தங்களது வாழ் நிலையிலிருந்து இவர்கள் பேசுகிறார்கள். மக்களை மேலும் மேலும் கஷ்டங்களில் தள்ளுவதை மறைப்பதற்காக போதை வசனங்களை அவர்களுக்குத் தருகிறார்கள். முதலில் மக்கள், இவர்களிடமிருந்து சுதந்திரம் பெறாமல், நமது பிரச்சினைக்கான தீர்வை அடைவதென்பது இப்படியே தள்ளிப் போய்க் கொண்டு தானிருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

1 comments :

Anonymous ,  January 21, 2013 at 11:54 AM  

They make every opportunities for their benefits.For the last 60 years in the office they haven't moved even very piece of stone,this everyone knows very well,South Africa,Washington,Geneva,London tours what they have made and in future they are going to make.We make dreams over their bogus efforts,that's all.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com