அமெரிக்கவின் பாதுகாப்பு உட்டபட முக்கிய மூன்று பிரதிச் செயலர்கள் உள்ளடக்கிய குழுவொன்று நாளை இலங்கைக்கு விஜயம்
அமெரிக்காவின் முக்கிய உறுப்பினர்கள் மூவர் அடங்கிய குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த விசேட பிரதிநிதிகள் குழுவில் அமெரிக்காவின் பிரதி உதவிச் செயலாளர் ஜேம்ஸ் மூர், பாதுகாப்பு பிரதி உதவிச் செயலாளர் விக்ரம் சிங் மற்றும் பிரதி உதவிச் செயலாளர் ஜேன் ஜிம்மர்மன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இக்குழுவினர், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான விஜயத்தினை நாளை 26ஆம் திகதி முதல் பெப்ரவரி முதலாம் திகதிவரை மேற்கொள்ளவுள்ளனர்.
0 comments :
Post a Comment