Monday, January 28, 2013

உள்ளுக்குள் நகமும் தசையும் மாதிரி, வெளியே வந்தால் நான் தேசியவாதி! (படம் பார்த்து கதை சொல்லுங்கள். )

தமிழ் தேசியம் பேசுவதில் இன்று முன்னிலையில் நிற்பவர் கிளிநொச்சி மாவட்டத்திற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன். அண்மையில் அவரது இணைப்புச் செயலாளர் மற்றும் பிரத்தியேக செயலாளர் என இருவர் இலங்கையின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து வெடி மருந்துகளுக்கு அப்பால் மீட்கப்பட்ட ஆபாச சீடிக்கள் , பிரதேச யுவதிகளின் புகைப்படங்கள், வகைவகையான பிரிதிப்பக்கட்டுக்கள் மக்களின் புருவங்களை உயர வைத்தது.

ஆனால் மேற்படி அத்தனையும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் மீட்கப்பட்டபோதும், அது சிறிலங்கா அரசின் திட்டமிட்ட செயலாம் என்றும் விடயத்தினை படம்பிடித்த ஊடகவியலாளர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவு ஊடகவியலாளர்களாம் என்றும் சொன்னார் சிறிதரன். கேள்வி கேட்க திராணயற்ற ஊடவியலாளர்கள் களவாணிப்பயல் கூறும் கதையை அப்படியே தட்டச்சு செய்து பிரசுரித்துவிடுவார்கள் அல்லது களவாணிப்பயலே தட்டச்சு செய்து கொடுப்பதை பிரசுரித்து மக்களை ஏமாற்றிவிட்டோம் என சுய இன்பம் கண்டுகொள்வார்கள்.

அலுவலகத்தினுள் சிறிலங்கா அரசாங்கம் அவற்றை திட்டமிட்டு வைத்து விட்டது என்று சிறிதரன் சொல்ல அவற்றை அப்படியே பிரசுரித்த ஊடகங்கள் எவ்வாறு வைத்தார்கள் , உங்கள் பிரத்தியேக செயலாளரின் மடிக்கணினியினுள் பிரதேச யுவதிகளின் படங்களும் , ஆபாசி வீடியோ கட்சிகளும் இருந்துள்ளனவே? எவ்வாறு மற்றவர்கள் அவரது கணினியினுள் நுழைய முடியும் , அவ்வாறு ஊடுருவ முடியுமென்றால் இலங்கை அரசிற்கு எதிராக திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரங்களை செய்துகொண்டிருக்கின்ற தங்கள் சகோதரனின் கணினியினுள் ஊடுருவி இணையத்தை முடக்கலாம் அல்லவா என்ற கேள்விகளை கேட்கவும் இல்லை அதற்கு திராணியும் இல்லை. சரி, நாங்களேனும் ஐயாவிடம் இவற்றை கேட்போம் என அழைப்பை ஏற்படுத்தி இலங்கைநெற் இல் இருந்து பேசுகின்றோம் என்றால், 'நான் இப்ப சிக்கன் குறைவான இடத்தில் நிற்கின்றேன் லைன் கிளியர் இல்லை என்பது நல்ல கிளியராக கேட்கும். பின்னர் சில செக்கண்கள் ஐயா ஹலோ ஹலோ எனக் கத்துவார். தொடர்ந்து இணைப்பு துண்டிக்கப்படும்.'

மேலும் சிறிதரனுக்கு வக்காலத்து வாங்குகின்ற ஊடகங்கள் தொடர்ந்து மக்களை மந்தைகள் ஆக்கிக் கொண்டிருக்கின்றது. தமிழ் தேசியம் பேசுவதில் சம்பந்தன் , மாவை , சுரேஸ் பிறேமச்சந்தின் போன்றோரிலும் சிறிதரன் வல்லவராம் அதனால்தான் சிறிலங்கா அரசாங்கம் சிறிதரனை இலக்கு வைக்கின்றதாம் என தங்கட சகாக்களுக்கே ஆப்பு வேறு. அத்துடன் சிறிதரன் நான் இவ்வாறான மிரட்டல்களுக்கெல்லாம் அடிபணிய மாட்டேன் என்று கூறியதுடன் தனது சகாவான சப்ரா சரவணபவானிடமும் நீயும் ஒருக்கா சொல்லன் எனக்கேட்டு அவரும் சிறிதரன் அடிபணிய மாட்டார் என்றார்.

ஆனால் இங்கே என்ன நடக்கின்றது பாருங்கோ. தமிழ்த்தேசியவாதி யாருடன் நகமும் தசையும் போல் இருக்கின்றார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ..நாம் ஒன்றும் இது தவறு, இலங்கை இராணுவத்துடன் நீங்கள் ஒய்யாரம் செய்வது தப்பு என்று சொல்லவரவில்லை. இதை சாதாரண மக்கள் செய்தால் அதை தவறு என்று அதற்கு எத்தனையோ கோணங்களில் கதைகள் சொல்லிக்கொண்டு நீங்கள் ஒழிந்திருந்து அதைச் செய்கின்றீர்களே அதைத்தான் தப்பு என்கின்றோம்.

தமிழ் தேசியம் என மூச்சுக்கு ஒருமுறை சொல்லுகின்ற சிறிதரன் மாத்திரம் இவ்விடயத்தினை செய்யவில்லை. மூத்த தலைவர்கள் கொழும்பில் அரச மாளிகைகளிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் இதையே செய்கின்றார்கள். சிறிதரன் இன்னும் அரசியலில் கற்றுக்குட்டி என்ற காரணத்தினாலும் முள்ளுக்கரண்டி பிடித்து சாப்பிடத்தெரியாது என்ற காரணத்தினாலும் ஓலைக் குடிசைக்குள்ளே ஒய்யாரம் செய்கின்றார் அவ்வளவுதான் வித்தியாசம்.

மேற்படி தமிழ் தேசியத் தலைவர்களுக்கும் அரச உயர் மட்டத்திற்குமிடையே உள்ள உறவு பற்றி இலகு வழியில் விளங்கப்படுத்துவதானால்.

'அங்கிள் மை டாட் இஸ் நொட் டேக்கிங் மீ ரு யப்னா'

என்று மஹிந்தரிடம் முறையிட்டிருக்கின்றாள் சப்ரா சரவணபவானின் மகள். இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்வது என்ன. அந்தக்குழந்தைக்கு நன்றாக தெரிந்திருக்கின்றது தனது தந்தையின் உற்ற நண்பன் யார் என்பதும் யாருக்கு மாத்திரம் தனது தந்தை கட்டுப்பட்டவன் என்பதும். அதனால்தான் அந்தக்குழந்தை குடும்ப விருந்தொன்றில் அதிபர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தபோது, அங்கிள் என்னுடை அப்பா என்னை யாழ்பாணம் கூட்டிக்கொண்டு போகின்றார் இல்லை என முறையிட்டுள்ளது.

அதாவது யாழ்பாணச்சமுதாயம் கேடுகெட்ட சமுதாயம் அங்கெல்லாம் எங்கள் பிள்ளைகளைக் கூட்டிச்செல்லக்கூடாது. கொழும்பே வாழ்வதற்கு சிறந்த இடம் சிங்கள நண்பர்களே சிறந்தவர்கள் என தமது வாரிசுகளுடன் கொழும்பில் உல்லாசமாக இருக்கின்ற தமிழ் தலைவர்கள் பாமர மக்களை எத்தனை காலம்தான் தொடர்ந்தும் இவ்வாறு ஏமாற்றுவார்கள் என்பதே மேலுள்ள படங்களை பார்த்த உங்களிடம் நாம் கேட்கும் கேள்வி.

4 comments :

Anonymous ,  January 29, 2013 at 9:38 AM  

We have heard about double game or double standard one on the opposite side the other on the other side.This is what some of our tamil politicians did and do and the voters being cheated.Kilinotchci Mp cannot be an exceptional one.Until we make use of our brain
we will be cheated for ever.This is what we have experienced for the last many many years.

Anonymous ,  January 29, 2013 at 10:45 AM  

Double standard policy has a long history in our tamil politics.Knowingly or unknowingly we have accepted this automatically.

guna ,  January 29, 2013 at 10:48 AM  

இந்த ஏமாற்று பேர்வழியின் குஞ்சாமணியை வெட்டி யாழ்பாணம் சந்தையில் ஏலம்போட வேண்டும். ஆனால ஒரு நிபந்தனை ஏலத்தில் நாய்கள் மட்டுமே பங்குபற்றவேண்டும்.

Anonymous ,  January 29, 2013 at 11:07 AM  

Come out of your illusion and dark days think sensitvely about the genuine future and provide your generation a better future.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com