Sunday, January 13, 2013

சிராணி செல்ல மறுக்கிறார் : பிலிப்பீனிய முறையை வேண்டுகிறார்!

பாராளுமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கையொப்பமிட்டுள்ள குற்றப் பிரேரணையைக் கருத்திற்கொள்ளாது, முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா, பதவியை விட்டு நீங்காமலிருக்க புதிய தீர்மானத்திற்கு வந்துள்ளதாக அறிய முடிகிறது. இவ்வேளை, புதுக்கடை நீதிமன்றக் கட்டிடத் தொகுதியில் உள்ள பாதுகாப்புப் பெட்டகங்களிலுள்ள பூட்டுக்கள் கழற்றப்பட்டு, புதுப்பூட்டுக்கள் பூட்டப்பட்டுள்ளன.

பொதுவாக நீதிமன்றத்திலுள்ள அனைத்துப் பெட்டகங்களினதும் திறப்புக்கள் பொறுப்புமிக்க ஓர் அதிகாரியின் கீழே உள்ளன. தற்போது மிகவும் தேவைப்பாடுள்ள கோப்புக்கள் அடங்கிய பெட்டகங்கள் அதிகாரியின் திறப்புக்களால் திறக்கமுடியாதுள்ளன. அவற்றுக்கு வேறு பூட்டுக்கள் பூட்டப்பட்டுள்ளன.

இதன்மூலம் தெரியவருவது என்னவென்றால், முன்னாள் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீங்கிச் செல்ல விரும்பாமல் தன்னுடைய விருப்புக்கு தொடர்ந்து நிற்க முயலுவதாகவும் நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதுஎவ்வாறாயினும், அண்மையில் பிலிப்பீனில் இவ்வாறான நிகழ்வொன்று நடைபெற்றுள்ளதோடு, குற்றவியல் பிரேரணைக்குத் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரும் அந்நாட்டின் பிரதம நீதியரசர் ரெனாட்டோ பதவி விலகவில்லை என்பதும், அவரை அரசாங்கம் பின்னர் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி பதவி நீக்கம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.


(கலைமகன் பைரூஸ்)

1 comments :

Anonymous ,  January 13, 2013 at 11:03 AM  

Chief Justice,a doctorate lady in laws.We do repect you,but it is much better to leave the place where you get lack of repect,we look forward that reputation to be saved

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com