தாதியர்களின் பட்டபடிப்பு கனவு நினைவாகியுள்ளது!!
கொழும்பு தாதியர் பயிற்சி கல்லூரியின் பட்டப்பின்படிப்பு பல்கலைக்கழக பீடமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்தார். அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் சங்கைக்குரிய முருத்தட்டுவே ஆனந்த தேரர், அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, சுகாதார மற்றும் உயர கல்வி அமைச்சின் அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்து கொணடனர்.
தாதியர் சேவையில் பட்டதாரி தாதியர்களை இணைத்துக் கொள்வதற்கு பல்கலைக்கழக கல்வி பீடம் ஒன்றை ஆரம்பிக்குமாறு தாதியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. இதனடிப்படையில் கொழும்பு தாதியர் கல்லூரியை பட்டப்பின்படிப்பு பல்கலைக்கழக பீடமாக மாற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் எதிர்கால நடவடிக்கைகளுக்கு சுகாதார, உயர்கல்வி அமைச்சுக்கள் மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்படும்.
அடுத்தாண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு தாதியர் பட்டப்பின்படிப்பு பாடநெறியை பூர்த்தி செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளை பணித்தார்.
0 comments :
Post a Comment