பெற்ற ஆண் பிள்ளையை பொலித்தீன் பையில் போட்டு நிலத்தில் புதைத்த தாய் கைது
பெற்ற ஆண் குழந்தையை பிரசவித்த தாயே நிலத்தில் குழி தோண்டி புதைத்த சம்பவம் ஒன்று அக்கரைப்பற்றில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் அக்கரைப்பற்று ஆலிம்நகர் பிரதேசத்தில் நேற்று இடம் பெற்றுள்ளதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆலிம் நகர் குப்பைமடு பகுதியில் உள்ள குறித்த பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது குழந்தை கடந்த 26 ஆம் திகதி இறந்த நிலையில் பிறந்ததாக தெரிவித்த தாய் அதனை பொலித்தின் பையிலிட்டு நிலத்தில் புதைதத்தாகவும்; பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment