மேடையில் முழங்குவது தமிழ் தேசியம்! மாலை போட்டு கொண்டாடுவது இராணுவத்துடன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் மு.றெமீடியஸ் பாஷையூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இராணுவத்தினருடன் கொஞ்சிக் குலாவிக்கொண்டிருந்தார்.
தமிழ் தேசியம், பாரம்பரிய என்றும் பேசிக்கொண்டு இலங்கை அரசையும் இராணுவத்தையும் விமர்ச்சித்துக்கொண்டு மக்களிடம் வாக்குப்பெற்று மாநகர சபை தேர்தலில் எதிர்கட்சித் தலைவராக இவர் தெரிவானார்.
இதனைத் தொடர்ந்து மாநகர சபையில் ஈ.பி.டி.பி யோடு ஒன்றாக உலாவரும் இவர் விரைவில் ஈ.பி.டி.பியில் இணைவார் என்றும் பேசப்பட்டது.
இந்நிலையில் பாஷையூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இராணுவத்தினருடன் கொஞ்சிக் குலாவிக்கொண்டிருந்தார். குறிப்பாக இராணுவ உயர் அதிகாரிகளுடன் மிக அருகில் ஒட்டிக்கொண்டே நிகழ்வு முழுவதிலும் கலந்து கொண்டிருந்தார்.
வெளியே மக்களை ஏமாற்றிக்கொண்டு தேசியம் போராட்டம் என்று கதைவிடும் இவர்களைப் போன்றவர்களது உண்மையான முகம் என்னவென்பது மக்களில் பலருக்கு இன்னமும் தெரியாத ஒன்றாக உள்ளது.
உண்மையில் இவர் மாத்திரமில்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட அரசாங்கத்தோடு எப்போது நண்பர்கள் தான்.
ஆனால் பாவம் மக்களாகிய நீங்கள் வாக்குகளுக்காக அவர்கள் போடும் வேஷங்களை இன்னமும் அறியாதவர்களாகவே இருக்கிறீர்கள்.
நகரசபை அமர்வொன்றின்போது போத்தல்களால் எறிந்து கலகமொன்றை இவர் ஏற்படுத்தியிருந்தார் என்பது யாவரும் அறிந்திருந்து கதை. இவர் சுரேஸ் பிறேமச்சந்திரனின் நெருங்கிய சகா என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
.
0 comments :
Post a Comment