Friday, October 26, 2012

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப் பட்டதற்கான ஆதாரங்கள் ஐ.நா விடம் உண்டாம்.

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கான காணொளி ஆதாரங்கள் உள்ளன. அவற்றை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டின் போது பயன்படுத்த எதிர்பார்த்திருப்பதாக ஐக்கிய நாடுகளின் சட்டரீதியற்ற கொலைகள் மற்றும் வன்முறைகள் தொடர்பான விசேட பிரதிநிதி கிறிஸ்டொப் ஹென்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் சபையின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின்; சட்டரீதியற்ற கொலைகள் மற்றும் வன்முறைகள் தொடர்பான விசேட பிரதிநிதி கிறிஸ்டொப் ஹென்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டின் போது பருவ கால அறிக்கை சமர்ப்பிக்கபடும் போது, உறுப்பு நாடுகளுக்கு 70 நொடிகள் மாத்திரமே கருத்து வெளியிட்ட கால அவகாசகம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டின் போது, இலங்கை தொடர்பில் தாம் விசேட அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comments :

Anonymous ,  October 26, 2012 at 7:04 PM  

What's happening now ln Syria,Irag,Afghanistan and Libya Specially now in Banni walid.Will the UN take action against the
perpetrators....?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com