Thursday, October 18, 2012

96 வயதில் தந்தையாகி சாதனை படைத்த நபர்

அரியானாவை சேர்ந்தர் கரம்ஜித் 96 வயதில் தந்தையாகியுள்ளார்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது 94 வயதில் முதல் குழந்தைக்கு தந்தையானார். இதையடுத்து உலகிலே அதிக வயதான தந்தை என்று சாதனை படைத்தார். 2 ஆண்டுக்களுக்கு பிறகு,அதாவது தனது 96 வயதில் கடந்த மாதம் மற்றொரு குழந்தைக்கு தந்தையானார். இதையடுத்து, உலகிலேயே அதிக வயதான அப்பா என்ற பட்டத்தை இரண்டாவது முறையாக வென்றிருக்கிறார். இவரது மனைவி சகுந்தலாவுக்கு 54 வயதாகிறது.

நாடி நரம்பு தளர்ந்துபோகும் வயதில் தந்தையான ரகசியம் பற்றி கேட்டபோது கரம்ஜித் கூறியதாவது: தினமும் 3 அல்லது 4 முறைகூட தாம்பத்ய சுகம் வைத்துக் கொள்வேன். இதை அறிந்து எனது பக்கத்து வீட்டுக்காரர் பொறாமையால் தவிக்கிறார். இந்த வயதிலும் உறவு வைத்துக்கொள்ளும் ரகசியம் என்ன என்று கேட்கிறார். இது கடவுள் அருள் என்று அவரிடம் சொல்வேன். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். மனைவியுடன் உறவு வைத்துக்கொள்வதை சந்தோஷமாக அனுபவிக்கிறேன். கணவன் மனைவி தாம்பத்ய உறவு என்பது தவறாமல் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இது மிகமிக அவசியம்.

குழந்தை பிறந்ததால் தற்போதைக்கு உறவு வைத்துக் கொள்வதை தள்ளி வைத்திருக்கிறேன். பாதாம்பருப்பு, வெண்ணெய் நிறைய சாப்பிடுவேன். நிறைய பால் குடிப்பேன். இதுதான் எனது ரகசியத்துக்கு முக்கிய காரணம். மனைவியை நன்றாக கவனித்துக்கொள்கிறேன். அவளது தேவையை முழுமையாக நிறைவேற்றுகிறேன். 25 ஆண்டுகளுக்கு முன்பு சகுந்தலாவை சந்தித்தேன். அவள் ஒரு விதவை. ஆதரவின்றி நின்ற அவளை நான் அழைத்தபோது என்னுடன் வந்துவிட்டாள்.

என்னுடைய முன்னாள் காதலர்கள் எல்லோருமே இறந்து விட்டார்கள். இதையடுத்து அவளை மனைவியாக்கிக் கொண்டேன். இவ்வாறு கரம்ஜித் கூறினார். 'கரம்ஜித் மட்டும் என்னை ஏற்காமல் இருந்திருந்தால் இந்நேரம் இறந்துபோய் இருப்பேன். அவருக்கு எவ்வளவு வயதானாலும் அதுபற்றி கவலை இல்லை. அவர் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன். சில நேரம் என் மீது அவர் கோபம் காட்டினாலும் அவரை வெறுக்க மாட்டேன். 25 வயது வாலிபன் காட்டும் காதலைவிட அதிகமான காதலை என்னிடம் வைத்திருக்கிறார்' என்றார் சகுந்தலா.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com