Wednesday, September 19, 2012

இந்திய பொருளாதார வர்த்தக வலயம் திருகோணமலையில்

திருகோணமலையில் இந்திய பொரு ளாதார வர்த்தக வலயத்தை உருவா க்கி, வாகன உதிரிப் பாகங்களையும், இயந்திரங்களையும், தயாரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகின்றன.

இந்திய வாணிப மற்றும் தொழிற்சாலைகள் அமைச்சர் ஆனந்த சர்மாவின், இலங்கை வருகையின் போது முன் வைத்த திட்டங்களுக்கமைய இது அமைக்கபடுகின்றது எனவும், இந்த விசேட பொருளாதார வலயத்தில் இந்திய தனியார் நிறுவனங்களின் உதவியுடன் தொழிற் பயிற்சி நிலையங்களும் அமைக்கப்படவிருப்பதாகவும். இந்திய வர்த்தகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் ஒன்றிணைந்த மருத்து உற்பத்திச் சாலைகளை நிறுவுவதற்கு இந்தியா மற்றும் இலங்கை திட்டமிட்டுள்ளதாகவும், இந்திய வர்த்தகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com