Sunday, September 30, 2012

முகத்தைக் காட்டும் கண்ணாடி மனத்தைக் காட்டக்கூடாதா? ராம் சிவலிங்கம்

நாடுகடந்த தமிழீழத்தினுள் பிரதமருக்கு எதிராக சதியாம்.. விளக்குகின்றார் பிரதி பிரதமர்..

ஒட்டுமொத்த சிங்களத் தலைமையும் எம் இனத்தின் எதிரிகளென்றால், அவர்களுடன் கைகோர்த்து எம்மவர்க்கு எதிராக செயற்படுபவர்கள் துரோகிகளென்றால், எம்முடன் சேர்ந்து எம்மோடு வாழ்ந்து எமக்கு உதவுபவர்போல் நடித்து எம் இனத்துக்கு தீமையும் தீங்கும் விளைவிப்பவர்களை எப்படியப்பா வர்ணிப்பது?

நாடுகடந்த தமிழீழ அரசின் முன்னேற்றத்தைக் கண்டு பெருமையடையாத தமிழர் எவருமே இருக்கமுடியாது. குறிப்பாக, பிரதமர் உருத்திராவுக்கும் உதவிப் பிரதமரான எனக்குமான இணையில்லா நட்பும் ஆற்றல்மிகுந்த பங்களிப்பும் இதற்கு வலுத்தந்தது என்றால் அதுதான் உண்மை

அப்படியான எமது உறவை. நாடுகடந்த தமிழீழ அரசினுள் இருந்த ஒற்றுமையைக் குலைத்து எம் இனத்தின் விடுதலைக்கு பங்கம் விளைவிக்கும் உலகின் ஒரே தமிழ் அமைப்பு என்றால் C.T.C எனப்படும் கனடாத் தமிழர் பேரவையே, குறிப்பாக, இதனை நிர்வகிக்கும், சம்பளம் எடுத்து சேவை புரியும் ட்ன்ரன் துரைராஜா என்பவரே. இது குற்றச்சாட்டல்ல, நடந்த உண்மை. இந்தப் பேரவையே நான் கூறும் "எம்முடன் சேர்ந்து எம்மோடு வாழ்ந்து எமக்கு உதவுவதுபோல் நடித்து எம் இனத்துக்கு தீமையும் தீங்கும் விளைவிப்பவர்கள்".

G,T.F எனும் உலகத் தமிழர் பேரவையின் கனடாக் கிளையான இவர்கள் , பிதா இமானுவல்லின் போக்கும் செயல்களும் எமக்குப் பிடிக்கவில்லை, கொள்கையால் மேம்பட்ட உங்களுக்கு உதவுவதையே நாம் விரும்புகிறோம் என்று இருகரங்களையும் நீட்டினார்கள். அடுத்த நிமிடமே, பொன் பாலா, யோ அந்தோனி போன்றோர் அவர்கள் கட்டிடத்தில் கூட்டம்கூடத் தொடங்கினர். எமது பொதுக்கூட்டங்களுக்கு டன்ரன் அல்லது டேவிட் பூபாலபிள்ளை மட்டுமே வருவார்கள். சில கூட்டங்களில் டேவிட் பேசினார். இதுதான் எமது ஆரம்பம்,.

அமைப்புக்களின், சங்கங்களின், கழகங்களின் ஆதரவை திரட்டும் முகமாக கனடாத் தமிழர் பேரவையின் கட்டடத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்திற்கு உதவிப் பிரதமரான நான் எமது ஊடகத்துறை அமைச்சர் சாம் சங்கருடன் சென்றேன். நாம் காரிலிருந்து இறங்கியதும் தொண்டர் சிவராம் ஓடிவந்து என்னிடம் கூறினார் "ஐயா! அங்கு வராதீர்கள், நீங்கள் வந்தால் பொன் பாலா வெளியில் செறுவிடுவார் எம்மில் சிலரும் அவருடன் சென்றுவிடுவோம்" என்று.

தொண்டர் சிவராமுடன் சாம் கதைக்க அயலில் நின்ற எமது பிரதிநிதிகளிடம் சென்று வினவினேன். எனக்கு எதிராக சதி நடப்பதாகவும் பல கூட்டங்கள் நிதி அமைச்சினால் கூட்டப்பட்டதாகவும் அங்கு என்னைப்பற்றி மட்டுமே பேசப்பட்டதாகவும் கூறினர். கனடாத் தமிழர் பேரவையயைக் கிளையாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவையின் தலைவர் மதகுரு இம்மானுவல் அடிகளாரே இவர்களைச் ச்ந்தேகக் கண்ணோடு பார்க்கும்போது, நாடுகடந்த தமிழீழ அரசில் பொறுப்பான பதவிகளை வகிக்கும் நான் ஏன் அப்படிப் பார்க்கக் கூடாது?

நிலமையை நன்கு உணர்ந்த நான் கூட்டம் நடைபெறும் அறைக்குச் சென்றேன். அப்போது டன்ரனின் அறையில் இருந்து வந்த பாலா முகத்தை மறுபுற்ம் திருப்பிக்கொண்டு கூட்ட அறைக்குள் நுளைந்தார். கூட்டத்தை ஆரம்பித்த நான் வந்தவர்களை வரவேற்றுவிட்டு, நிலமையைச் சமாளிக்க எனக்கு என்னொரு வேலை இருப்பதால் சாம் இக்கூட்டத்தை நடத்துவார் எனக் கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டேன்.

அதன்பின் எத்தனையோ நடந்தது, மே 18 மட்டுமே இவ்ர்களை யாரென்று அறியப் போதுமானது என்பதால் அதை இங்கு தருகிறேன். குயீன்பார்க் பாராளுமன்றத்துக்கு முன்னுள்ள் திடலின் மே 18 திகதிக்கான அனுமதியை வீர விஜயேந்திரா பெற்றுத் தந்தார்.

மக்கள் அவையும், நாடுகடந்த தமிழீழ அரசும் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்வு செய்யப்பட்டவை என்றதாலும், எம் உறவுகளுக்கு உணர்வுடனும், உரிமையுடனும் உதவுபவர்கள் என்ற காரணத்தாலும் மே 18 ஐ இருவரும் சேர்ந்து செய்வதே மேல் என்பதால் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதை தடுக்கும் முகமாக டன்ரனும் வீர வியயேந்திராவும் பிரதமருடன் தொடர்பு கொண்டனர்.

பிரதமரிடம் " உங்கள் பிரதிநிதிகளிடம் குயீன்பார்க் திடல் இல்லை எங்களிடம்தான் அதற்கான அனுமதி இருக்கிறது, எம்முடன் நீங்கள் சேர்ந்து மே 18 ஐ செய்வதையே நாம் விரும்புகிறோம்" என்றனர். இவர்களும் சேர்க்கப்பட்டார்கள். சாம் சங்கரும், வின் மகாலிங்கமும், நிமால் விநாயகமூர்த்தியும் எமது சார்பில் பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்டனர்.

மக்கள் அவையும், நாடுகடந்த தமிழீழ அரசும் அரசியல் ரீதியான் தமது கருத்தைப் பரிமாறும்போது கனடாத் தமிழர் பேரவை பல நாட்களைக் கடத்திவிட்டு நிகழ்வுக்கு ஒரு வாரம் இருக்கையில், தாம் இந்த நிகழ்வை நடத்தினால் மட்டுமே குயீன்பார்க் திடலை தரமுடியும் என்றும், நாடுகடந்த தமிழீழ அரசின் பெயரோ, அதன் சின்னமோ எதிலும் போடக்கூடாது என்றும், அதன் துணைப் பிரதமர் தலமை தாங்கவோ பேசவோ கூடாது எனவும் பல நிபந்தனைகள் போடப்பட்டன. வின் மகாலிங்கம் கட்சி மாறி கனடாத் தமிழர் பேரவையின் பிரேரணையை நிமாலுடன் சேர்ந்து ஆதரித்தார். புது இடம் எடுத்து ஒரு கிழமைக்குள் நிகழ்வைச் செய்ய முடியாது என பொன் பாலா குழுவினர் பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து டன்ரன் கூறியபடியே பிரதமரை ஒத்துக்கொள்ள வைத்தனர்.

* பேச்சுவர்த்தை நடக்கும்போதே கனடாத் தமிழர் பேரவையின் சுவரொட்டிகளை அடிக்க அனுமதி கொடுத்தது யார்? யாரிடம் அந்த அதிகாரம் இருந்தது?
* மக்களவையினருடன் பேச்சுவார்த்தைக்குப் பிரதமரால் அனுப்பப்பட்ட வின்னையும் நிமாலையும் மற்றவர்கள் முன்நிலையில் அவதூறாகப் பேச டன்ரனுக்கு அதிகாரத்தைக் கொடுத்தது யார்? வின்னும் நிமாலும் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் பெட்டிப் பாம்பாக இருந்ததன் காரணம் என்ன? .

சுணாமியில் பிளைத்து, கொடிய போரில் தப்பி, தாங்கொணா வெள்ளத்தில் மிதந்து மூன்று ஜென்மங்களை எடுத்த எம் உறவுகளுக்கோ அல்லது புலத்தில் வாழும் தமிழருக்கோ இதுவரை எந்த உதவியும் செய்யாத ஒரே தமிழ் அமைப்பான கனடாத் தமிழர் பேரவையை எப்படி வர்ணிப்பது? மக்களின் பணத்தில் கட்டும் வாடகையை அங்கு அனுப்பி பசியால் வாடும் எம் சிறார்களின் பசியைத் தீர்த்திருகலாமே. தம்து சேவைக்கு எடுக்கும் சம்பளத்தில் ஆயிரக்கணக்கான விதவைகளுக்கு உதவியிருக்கலாமே. எமது சுமையைத் தமது தோழில் சுமந்த எம் தேவதைகளை, ஒருசாண் வயிற்றின் கொடுமை தாங்காது கண்ணில் நீர்பெருக தம் மனதைக் கல்லாக்கி உடலை மரமாக்கி, தம்மை விலைபேசும் நிலையில் இருந்து அங்கத்தவர் பண்த்தினால் காப்பாற்றியிருக்கலாமே.

கனடாத் தமிழர் பேரவையின்ருக்கு ஓர் அன்பான வேண்டுகோள். எம் மக்களின் பணத்தில் கோட்டை கட்ட எண்ணாதீர்கள், அது, வாழ்வாதாரம் ஏதுமின்றி வாழமுயலும் எம் உறவுகளுக்கு மட்டுமே. நாம் எமது கனவை இலட்சியமாககி செயற்படுபவர்கள். எமது இலட்சிய்த்தை கனவாக மாற்ற முற்பட்டால் நீங்கள் எமது மக்களின் சீற்றத்துக்கு ஆளாகுவதை யாராலும் தடுக்க முடியாது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com