Saturday, August 11, 2012

நித்தி-ரஞ்சிதா நேபாளத்தில், ‘பொறியில் சிக்கிய எலிகள்’ ஆகியது இப்படிதான்!

டில்லி ஏர்போர்ட்டில் பாஸ்போட்கள் சிக்கி விவகாரமான நிலையில், பொறியில் அகப்பட்ட எலியாக தவிக்கிறார் நம்ம நித்தி சுவாமிகள். டில்லி ஏர்போர்ட் விவகாரம், அவரது வெளிநாட்டு எஸ்கேப் பிளானை கெடுத்து விட்டதே அதற்கு காரணம்.

நித்தி-ரஞ்சிதாவும், 30 சீடர்களும் வெளிநாடு செல்லும் திட்டம் பாணால் ஆனது எப்படி? எமக்கு கிடைத்த தகவல்களை வெளியிட முயலும் போதெல்லாம், மாறி மாறி தகவல்களில் ஏதாவது ஒரு ஒரு குழப்பம் வந்து கொண்டிருந்தது. எமக்கு கிடைத்த தகவல்களை உறுதி செய்துகொள்ள முயன்றால், தலைகீழாக வேறு தகவல்கள் கிடைத்துக் கொண்டிருந்தன.

ஒருவழியாக… இப்போது எல்லாமே, உரிய இடங்களில் போய் பொருந்தியுள்ளன.

நித்தியின் எஸ்கேப் திட்டத்தை போட்டு குழப்பியதே, அவரது ட்ராவல் அட்வைசர் ஒருவர்தான். முதலில் நேபாளம்வரை போகலாம். அங்கிருந்து கர்நாடகா கேஸ் எப்படி போகிறது என்று பார்க்கலாம். நிலைமை இறுகினால், அப்படியே தாய்லாந்து சென்றுவிடலாம்” என்று ஐடியா கொடுத்ததும் அவர்தான்.

நித்தி கடந்த தடவை தாய்லாந்து சென்றபோது, எந்த சிக்கலும் கிடையாது. மதுரையின் இளைய ஆதீனமாக முடிசூடிக் கொள்ளும் முன், மூத்த ஆதீனத்தையும் அழைத்துக் கொண்டு தாய்லாந்து சென்று வந்தார் நித்தி. தாய்லாந்து உபசரிப்பில் மெய்மறந்த மூத்த ஆதீனம், நித்திக்கு முடி சூட்டும் டீலுக்கு சம்மதித்தது பழைய கதை.

அந்த நினைப்பில், தாய்லாந்துக்கு சுலபமாக போகலாம் என்பதே நித்தியின் நினைப்பாக இருந்தது. தாய்லாந்து விசா எடுப்பது பற்றி அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. காரணம், பெரிய சுவாமியை அழைத்துச் சென்றபோது, யாரும் இங்கிருந்து விசா எடுத்துச் செல்லவில்லை.

தாய்லாந்தில் போய் இறங்கும்போது, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஏர்போர்ட்டிலேயே 2 வாரங்களுக்கு விசா கொடுப்பார்கள். அதை பெற்றுக்கொண்டுதான் இரு சுவாமிகளும் திக்விஜயம் செய்திருந்தனர். ஆனால் இம்முறை, இளைய சுவாமிகள் நீண்டகால விசா எடுக்க விரும்பினார். இந்தியாவில் நிலைமை இறுகினால் மாதக்கணக்கில் அங்கு தங்குவதற்கு வசதியான 12 மாத விசா பெறுவதே திட்டம்.

நேபாள தலைநகரம் காத்மண்டுவில் தாய்லாந்து நாட்டு தூதரகம் உள்ளதால், விசாவை அங்கேயே எடுக்கலாம் என்றுதான் போனார்கள். அங்குதான் ஏற்பட்டது முதலாவது சறுக்கல்.

தாய்லாந்துக்கான நீண்டகால விசா எடுக்க விண்ணப்பிக்கும் ஒருவர், தாம் வசிக்கும் நாட்டில் (country of residence) உள்ள தூதரகத்திலேயே விண்ணப்பிக்க வேண்டும் என்று காத்மண்டுவில் உள்ள தூதரக அதிகாரிகள் கூறிவிட்டனர். என்னதான் நம்ம சுவாமிகள், “நான்தான் உலகையே காக்கும் கடவுள்” என்று சொன்னாலும், கடவுளின் country of residence, இந்தியாதான்.

மீண்டும் பரிவாரங்களுடன் டில்லி விசிட் அடிக்க வேண்டுமா என்று யோசித்தபோதுதான், அவரது ட்ராவல் ஆலோசகர், “நீங்கள் பேசாமல் இங்கேயே தங்கியிருங்கள். பாஸ்போர்ட்டுகளை மட்டும் டில்லிக்கு கொண்டுபோய், தாய்லாந்து தூதரகத்தில் விசா எடுத்துக்கொண்டு வந்து விடலாம்” என்று அட்வைஸ் கொடுத்துவிட்டார்.

அப்படித்தான் டில்லி ஏர்போர்ட் வரை வந்தன, நித்தி-ரஞ்சிதா மற்றும் சீடர்களின் பாஸ்போர்ட்டுகள்!

முக்காலமும் உணர்ந்த நம்ம சுவாமிகளுக்கு, டில்லி ஏர்போர்ட்டில் பாஸ்போர்ட்டுகள் சிக்கிக் கொள்ளும் என்பது தெரியாமல் போனது ஆச்சரியமே!

ஒருவேளை நேபாள கிளைமேட்டில், ஞானதிருஷ்டி மக்கர் பண்ணுமோ, என்னவோ!

நன்றி விறுவிறுப்பு


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com