Monday, July 23, 2012

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளவோம் - கிளர்ச்சிக்குழு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அக்கட்சியின் கிளர்ச்சிக்குழு தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு வருடத்திற்கு ஒருமுறை கட்சியின் உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு கட்சியின் தலைவர் தெரிவு செய்யப்படுவார் என்ற வாசகம் திருத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பில் 8.1 பரிந்துரைக்கமைய 6 வருடங்களுக்கு ஒருமுறை அக்கட்சியின் தலைவர் கட்சி உறுப்பினர்களின் வாக்கெடுப்பிற்கு அமைய தெரிவு செய்யப்படல் வேண்டும் என யாப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையிலேயே கட்சியின் யாப்பு விதிகளை மீறி தலைவர் பதவிக்கான தேர்தல்களை ஆறு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்த ரணில் விக்கிரமசிங்க தீர்மானம் மேற்கொண்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் கிளர்ச்சிக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

அத்துடன் யாப்பு விதிகளை மாற்றுவது தொடர்பிலான ஏற்றுக் கொள்ளப்பட்ட எந்தவொரு விதிமுறைகளையும் பின்பற்றாது மத்திய செயற்குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும், கட்சி யாப்பிற்கு எதிராக செயற்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை அக்கட்சியின் கிளர்ச்சிக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கட்சியின் உப தலைவர், பொது செயலாளர், பொருளாளர், மற்றும் ஊடகப் பேச்சாளர் ஆகியோரை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் தலைவருக்கே காணப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் திருத்தியமைக்கப்பட்ட யாப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com