Monday, July 2, 2012

இப்படியும் நடக்கிறது! பாராளுமன்ற உறுப்பினரும் பத்திரிகை வியாபாரமும்!

தேசியத்திலிருந்து தடம்புரண்ட சரவணன்

இலங்கை அரசாங்கத்தின் எந்தவொரு விளம்பரத்தையும் ஏற்பதில்லையெனும் கொள்கையுடன் அன்று விடுதலைப் புலிகளின் மறைமுகமான ஆதரவுடன் இயங்கிய யாழ் - கொழும்பு இணைந்த இரு பத்திரிகைகள் இன்று அதே இலங்கை அரசின் பக்கம் பக்கமான விளம்பரங்களை கேட்டு வாங்கிப் பிரசுரிக்கும் அளவிற்கு ஊடகச் சுதந்திரம் இந்த அரசினால் தாராளமாக வழங்கப்பட்டுள்ளதை, அவதானிக்க முடிகிறது.

ஊடகச் சுதந்திரத்திற்கு அரசு தடை எனப் புலி ஆதரவில் கிட்டாத வரப்பிரசாதமாக இனி அரச விளம்பர ஆதரவில் ஞாயிறு மலரும் வருகிறது. பக்கம் பக்கமாக தமிழ்த் தேசியத்திற்காக எழுதும் இப்பத்திரிகைகளின் உரிமையாளரான பாராளுமன்ற உறுப்பினர் இப்போது தனது கொள்கையையும் மாற்றிவிட்டார். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே தமிழரின் தேசியத் தலைவர் எனக் கூறிவந்த இவர் வெளிநாட்டு தொலைகாட்சி பேட்டியொன்றில் தமிழ்த் தேசியத் தலைவர் இரா. சம்பந்தனே என அடித்துக் கூறியுள்ளார்.

தனது பத்திரிகை அலுவலகத்தில் சிறு கல்லெறி விழுந்தாலும், துப்பாக்கிக் சூடு நடத்தப்பட்டாலும் ஈ.பி.டி.பி. கட்சியை நோக்கி கை நீட்டும் இவர், சுடப்பட்டவர்கள் காரியாலய சாரதி, பாதுகாவலர், ஒப்புநோக்குனர் ஆகியோரே என்பதையும் ஆசிரியராக இருந்த தனது மைத்துனரையோ அல்லது எந்த வொரு பத்திரிகையாளரையோ எவரும்சுட முயற்சிக்கவில்லை என்பதை உணராதவராக உள்ளார்.

அத்துடன் குடும்ப அரசியல் பற்றி விமர்சிக்கும் இவரும், இவரது பத்திரிகையும் யாழ்ப்பாணத்தில் தானும், கொழும்பில் மைத்துனரும் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்த வரலாற்றை மறந்து செயற்படுகிறார்.

உறவிற்குள் முரண்பாடு என்பது பிறரை முட்டாளாக்க நடத்தும் நாடகம் என்பது குடும்ப விழாக்களின் போது நிரூபணமாகியுள்ளது. தமிழரது பணத்தை வசூலித்து பின்னர் ஏமாற்றிய நிதியில் நடத்தும் பத்திரிகையில் அன்று புலிகள் இயக்கத்தால் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்.மற்றும் புளொட் இயக்க சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி ஒருசிறு செய்தியைக் கூட போட முடியாது இருட்டடிப்பு செய்யப்பட்டது. ஆனால் இன்று அதே இயக்கங்களில் எஞ்சியிருக்கும் தலைவர்களுடன் உறவாடி அவர்களது பேட்டிகளையும் செய்திகளையும் பிரசுரித்து வருகின்றார்.

ஜனாதிபதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவினர் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் தனது தனிப்பட்ட தெவைகள் குறித்து மட்டுமே பேசிவரும் இவரது சுயநல குண இயல்பினை நன்கு உணர்ந்து வைத்திருப்பதால் இவரைப் பாராளுமன்றிலே காணும் அரச தரப்பு அமைச்சர் கள் சகலரும் சரவணா, உங்களுக்கு தனிப்பட்ட முறையில் என்ன உதவி வேண்டும் என்றே கெட்பார் களாம்!

க.கந்தசாமி
கரவெட்டி-தினகரன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com