Monday, July 30, 2012

செய்தி இணையதளங்கள் மீதான புதிய ஒழுங்கு விதிகள் பற்றி தெளிவூட்டும் கூட்டம் ஆகஸ்ட் 14ல்

செய்தி இணையத்தளங்கள் மீதான புதிய ஒழுங்கு விதிகள் தொடர்பாக சம்பந் தப்பட்ட சகல தரப்பினருடனும் கலந்துரையாடலை நடாத்த இலங்கை பத்திரிகை நிறுவனம் தீர்மானித்துள்ளதாகவும், இதற்கினங்க ஆரம்ப கலந்துரையாடல் வரும் ஆகஸ்ட் 14 ல் காலை 9.00 முதல் மாலை 3.00 வரை இலங்கை பத்திரிகை நிறுவனத்தில் இடம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பொருட்டு சகல ஊடகங்களுக்கும் மற்றும் அவர்களின் செய்தி இணையதளங்கள் அத்துடன் தனிப்பட்ட இணையதளங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

அத்துடன், இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் கீழ் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனூடாக சுய ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடித்தல், வாசிப்பு உரிமையைப் பாதுகாத்தல் மற்றும் சரியான அறிக்கைகள் பற்றிய பொறுப்புணர்வை ஏற்படுத்தல் என்பன மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல் இலங்கை பத்திரிகை நிறுவனம், இலங்கை எழுத்தாளர் சங்கம், பத்திரிகை வெளியீட்டாளர் சங்கம், சுதந்திர ஊடக அமைப்பு மற்றும் இலங்கை தொழில்சார் பத்திரிகையாளர் சங்கம் போன்றனவும் இக்கலந்துரையாடலில் கலந்து கொள்ளவிருக்கின்றன என தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com