150 யிற்கும் அதிகமான இலங்கையர் இந்தியாவில் கைது.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்த சுமார் 150 யிற்கும் அதிகமான இலங்கை அகதிகள் இந்தியாவின் கேரள மாநில கொல்லம் கரையோரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவுஸ்திரேலியா செல்வதற்காக இந்திய பணப்பெறுமதியில் ஒரு இலட்சம் முதல் ஐந்து இலட்சம் வரை முகவர் ஒருவருக்கு செலுத்தியுள்ளதாகவும், இவர்களை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா அனுப்ப முயற்சித்த முகவர் மற்றும் உதவியாளர்கள் படகோடடி ஆகியோரும் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் பெண்களும் சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுறது.
0 comments :
Post a Comment