Friday, May 25, 2012

கீரியும் பாம்புமாக நின்றோர்க்கு கொஞ்சிக்குலாவ கிடைத்த சந்தர்ப்பம்

இன்றைய வீரகேசரியின் முதல் பக்கத்தில் ஓர் அட்டகாசமான படம் வெளியாகியிருந்தது. நாயும் பூனையுமாய், கீரியும் பாம்புமாய் ஒருவர் மீது ஒருவர் வசைபாடித் திரிந்த தமிழ்த் தலைவர்மார் ஒன்றாக வரிசையில் அமர்ந்து, பல்லைக் காட்டிக் கலகலப்பாகக் காணப்பட்டார்கள். ஏதோ திருமண நிகழ்ச்சியில உண்டு களித்து தாம்பூலம் தரித்துத்தான் இவ்வாறு கலகலப்பாக அளவளாவிக் கொணடிருக்கிறார்களோ என்று பார்த்தால், சப்பென்று போய்விட்டது. கீழே குனிந்து எதையோ எடுத்து விளாச வேண்டும் போலிருந்தது.

ஆனால் என்ன செய்ய அது வெறும் பேப்பர் தானே. விளக்கம் தேவைப்படாத இந்த படம் சிங்கள மக்களுக்கும் உலகுக்கும் என்ன சொல்லும்?. தமிழ் மக்களை வைத்து இவர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் சொல்லும். சிறையில் வாடும் தமிழ் இளைஞர்களுக்காக இவர்கள் வவுனியாவில் இருந்த உண்ணாவிரதப் படம்தான் இது. எவ்வளவு மகிழ்ச்சியாக்க் காணப்படுகிறார்கள். இன்பியலுக்கும் துன்பியலுகும் வேறுபாடு காணத பண்பற்ற இவர்களை இன்னும் தமிழ் மக்கள் நம்பிக் கொணடிருப்பதுதான் புதுமை.

அடப் பாவிகளா ! உண்ணாவிதர முற்றத்துக்குப் போகு முன்னர், ஒரு நிடமாவது மூன்று மணிநேர உண்ணாவிரதப் புகழ் மு.க.வின் முகபாவனைப் படத்தைப் பார்த்து ஒத்திகை பார்த்திருக்கக் கூடாதா!.6 comments :

Anonymous ,  May 25, 2012 at 8:04 PM  

மின்னல் நிகழ்ச்சியில் பல்வேறு வகையில் முகம்காட்டும் ஶ்ரீறங்கா போன்ற நடிகர்கள் இருந்தும்கூட இந்த முகம் காட்டும் வித்தையைச் சொல்லிக் கொடுக்கவில்லை என்பதைக்காணும்போது கவலையாக உள்ளது. கிரிகளும் பாம்புகளும் கூடும் இடத்தில் ஶ்ரீரங்கா போன்ற கறுப்பு ஆட்டுக்கு என்ன வேலையோ?

மகாராஜா ,  May 25, 2012 at 8:07 PM  

வீரகேசரி வைத்தது ஆப்பு. இவனுகளின் உண்மை முகத்துக்கு டோச் அடித்து காட்டியிருக்கு. பரிதாபம் மக்குகளுக்கு என்ன விளங்கப்போகுது.

Anonymous ,  May 25, 2012 at 10:29 PM  

ivvalavu periyum suddu thallavendum

Anonymous ,  May 26, 2012 at 2:52 AM  

இவனுகளுக்கும் பாதையில் நின்று ஆள் பிடிக்கும் விபச்சாரிகளுக்கும் என்ன வித்தியாசம்? கேட்டால்.. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று புளுடாக் கதைகள் விடுவானுகள்.

இன்னுமொரு முக்கியமான விஷயம். இந்த ஶ்ரீரங்கா பற்றி ஏனைய எல்லோரும் கவனமாக இருக்கவேணும். இவன் ஊரைத் திண்டு கடலை அள்ளிக் குடிச்சவன். சக்தி TV உரிமையாளரும் மலையகத் தமிழர்களும் ஏமாந்ததுபோல வடகிழக்குத் தமிழர்களும் ஏமாறக் கூடாது!!!!

UPALI ,  May 26, 2012 at 6:13 AM  

RANGA DANGEROUS TERRORIST....
HE DEALT WITH LTTE ...BUT LOYAL TO RAJAPAKSA.....SO NOW MP ....OK

NOW HE ACTS WITH TAMIL PARTIES....PLOT AGAINST TAMIL PARTIES AND THEIR ACTIVITIES...BE CAREFUL......

IN FUTURE HE WILL BE A MINISTER

HIS ACTS ARE ON THE REQUEST OF RAJAPAKSA'SON.

Anonymous ,  May 26, 2012 at 10:14 PM  

This stage play by the talented actors has seen all the usual mud slinging we have to come expect.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com