சீதுவை தடுகம் ஓயவில் தோணி கவிழ்ந்ததில் காணாமல்போன இருவரது சடலங்கள் மிட்பு
சீதுவை தண்டுகம் ஓயாவில் நேற்று மாலை தோணி கவிழ்ந்ததில் பேர் காணாமல் போன இரு இளைஞர்களினதும் சடலங்கள் இன்று மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு களப்புப் பகுதிக்கு அண்மித்தாக உள்ள கடோலான தாவரங்களை பார்வையிடுவதற்காக சென்ற ஐந்து பேர் கொண்ட குழு பயணித்த தோணி கவிழ்ந்து இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இதன் போது தோணி கவிழ்ந்ததில் ஐவரும் நீரில் மூழ்கியுள்ளனர். மூவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஆயினும் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
அவர்களது சடலங்களே சுழியோடிகள் மூலமாக இன்று மாலை மீட்கப்பட்டது.
பள்ளியவத்த, அக்கரகம,கொடகமுவ பிரதேசத்தை சேர்ந்த ரொசேன் சர்வங்க (28 வயது), ஜா-எல,கனுவக பிரதேசத்தை சேர்ந்த மலிந்த விக்ரம சுரேந்ர (24 வயது) ஆகியோரே இச்சம்பவத்தில் மரணமானவர்களாவர்.
சம்பவத்தில் மரணமானவர்களின் சடலங்கள் நீரகொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதணைக்காக வைக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் - எம்.இஸட்.எஸ்.
0 comments :
Post a Comment