வட தென் கொரியாகக்களிடையே போர் மூழும் அபயாயம்!
சியோலை 3-4 நிமிடத்தில் தீக்கிரையாக்குவோம் வட கொரியா எச்சரிக்கை!
கொரிய தீபகற்பத்தில் போர் மூளும் சூழல் நிலவுகிறது. கடந்த சில நாட்களுக்கு கிம்2 சங் 100-வது பிறந்த நாளை வடகொரியா வெகுவிமரிசையாக கொண்டாடியது. இது குறித்து தென்கொரியா அதிபர் லீ , மறைந்த வடகொரியா தலைவர் கிம்2 சங் குறித்து அவதூறாக பேசியுள்ளார்.
அவ்வாறு அவர் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வடகொரியா தெரிவித்தது. வருத்தம் தெரிவிக்காவிட்டால் தென்கொரியா மீது தாக்குதல் நடத்துவோம் என வட கொரியா பகிரங்கமாக அறிவிப்பு செய்திருந்தது.
இதற்கு பதில் அளித்த தென்காரியா அதிபர் லீ , வடகொரியா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ரூ.10,620 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை சோதனை நடத்தப் போவதாக அறிவித்ததை அடுத்து பதற்றம் நிலவியது.
இந்நிலையில் தென் கொரியாவிற்கு பதில் அளிக்கும் வகையில் வடகொரியா ராணுவம் மீண்டும் மிரட்டல் விடுத்தது. வடகொரியா தலைவர் கிம் 2 சங்கை அவதூறாக பேசிய தென்காரியாவுக்கு விரைவில் பாடம் புகட்டுவோம் என்று கூறியுள்ளது.
மேலும் தென்கொரியாவின் தலைநகர் சியோலை 3 அல்லது 4 நிமிடத்தில் சாம்பல் மேடாக்குவோம் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து கொரிய தீப கற்பகத்தில் கடும் போர் மூளும் சூழல் நிலவுகிறது.
0 comments :
Post a Comment