Sunday, April 22, 2012

ஆளும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பதவி வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியில் இதுவரையில் தமக்கு எவ்வித பதவிகளும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே, கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

லக்ஸ்மன் வசந்த பெரேரா, சரத் வீரசேகர,சனத் ஜயசூரிய, நிசாந்த முத்துஹெட்டிகம ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு பதவிகளைக் கோரி கடிதம் அனுப்பியுள்ளனர்.

எதிர்வரும் வாரத்தில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com