கடந்த 72 மணித்தியாளத்தில் வீதி விபத்துகளில் 18 பேர் மரணம் 138 பேருக்கு காயம்.
கடந்த 12 ஆம் திகதி காலை 06.00 மணி முதல், 15 ஆம் திகதி காலை 06.00 மணி வரையான காலப்பகுதியில் பாரிய 16 வீதி விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றில் 18 பேர் மரணமடைந்து ள்ளதுடன், 61 சிறிய வீதி விபத்துகளில் 138 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான, அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது, இம்முறை சித்திரை புத்தாண்டில் பாரிய வீதி விபத்துகளில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ள அதேவேளை, சிறிய அளவிலான வீதி விபத்துகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இக்காலப்பகுதியில் வாகனங்களை குடி போதையில் செலுத்தியமைக்காக, 257 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்தியமைக்காக 4 ஆயிரத்து 34 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்த, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸார் 24 மணிநேரமும் செயற்பட்டதன் காரணமாக பண்டிகைக் காலத்தில் வீதி விபத்துகளை கட்டுப்படுத்த முடிந்ததாகவும், இலங்கையின் அனைத்து பகுதிகளிலும், குடிபோதை மற்றும் ஒழுங்கீனமாக வாகனங்களை செலுத்துவோரை கைது செய்வதற்கு, நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்
0 comments :
Post a Comment