வீடுகளில் 13 தண்ணீர் மோட்டார்களை திருடிய நபர் கைது
திருடப்பட்ட13 தண்ணீர் இறைக்கும் மோட்டர்களுடன் (றயவநச அழவழச) பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பதிவு செய்யப்பட்ட குற்றவாழி (சைஉ) ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரியின் காரியாலயத்தை சேர்ந்த விசேட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஜகத் நிசாந்த தெரிவித்தார்.
நீர்கொழும்பு – கட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.
சந்தேக நபர் வீடொன்றில் தண்ணீர் மோட்டார் இயந்திரங்களை தீருடும்போது பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும், பாடசாலை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் போதைப்பொருளை விற்பனை செய்து வந்துள்ளவர் எனவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் வீடுடைப்பு, துவிச்சக்கரவண்டி திருட்டு உட்பட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவராவார்.
சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment