இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மற்றுமொரு தீர்மானமாம்
இலங்கைக்கு எதிராக மற்றுமொரு தீர்மானத்தினை, ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரின் பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக திவயின பத்திரிகை
செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் ஜெனீவா கிளைக்கான வதிவிடப் பிரதிநிதி தமரா குணநாயகம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டத்தை முறியடிப்பதற்கு சகல வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கையை தோல்வியடைந்த நாடுகளின் வரிசையில் பட்டியலிட அமெரிக்கா முயற்சித்து வருகின்றது எனவும் தமரா குணநாயகம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகல் இரவு பாராது வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் நாட்டின் நற்பெயரைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளதாக திவயின செய்தி மேலும் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment