நீர்கொழும்பு மாநகர சபையின் ஐ.தே.க. குழுத்தலைவாராக கெலிஸ்டர் ஜயகொடி நியமனம்
நீர்கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் குழுத் தலைவராக மாநகர சபை உறுப்பினர் ஆராச்சிகே தொன் கெலிஸ்டர் ஜயகொடி தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் குழுத்தலைவராக இருந்த ரொயிஸ் விஜித பெர்னாந்து குற்றச் சம்பவமொன்று தொடர்பாக சநதேகத்தின்பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக , கெலிஸ்டர் ஜயகொடி அந்தப் பதவிக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நீர்கொழும்பு மாநகர சபையின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
கடந்த மாநகர சபை தேர்தலில் கெலிஸ்டர் ஜெயகொடி 3845 விருப்பு வாக்குகளை பெற்று ஐ.தே.க.வின் விருப்பு வாக்கு பட்டியலில் மூன்றாவது இடத்தை பெற்றிருந்தார்.
0 comments :
Post a Comment