மூவாயிரம் மில்லியன் பெறுமதியான மின்மாற்றி கிளிநொச்சியில் பொருத்தப்படுகின்றது
வவுனியாவிலிருந்து கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு முழமையான மின்சாரத்தை வழங்குவதற்கென ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவன நிதி உதவியுடன் பாரிய மின்மாற்றிகள் பெருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுளளன.
இதற்காக 3 ஆயிரம் மில்லியன் பெறுமதியான இரண்டு மின்மாற்றிகளை ஜெய்க்கா நிறுவனம் இலங்கை மின்சார சபைக்கு வழங்கியுள்ளது.
இதன் மூலம் வவுனியாவிலிருந்து வரும் 132 வாட்ஸ் மின்சாரத்தை 32 மேகாவாட்ஸ் மின்சாரமாக மாற்றி இப்பகுதிகளுக்கு வழங்க முடியும்.
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் இதன் மூலம் வழங்கப்படும் என்பதோடு இதன் மூலம் 1 லட்சம் மக்கள் நன்மையடையவுள்ளனர்.
0 comments :
Post a Comment